தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mother's Day: அன்னையின் பாதத்தில் சொர்க்கம்.. இறை நூல்கள் கூறும் தத்துவம்.. அன்னையர் தின வாழ்த்துகள்

Mother's Day: அன்னையின் பாதத்தில் சொர்க்கம்.. இறை நூல்கள் கூறும் தத்துவம்.. அன்னையர் தின வாழ்த்துகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 12, 2024 06:00 AM IST

Mother's Day: ஒரு நாட்டின் எதிர்காலம் ஒரு தாயின் கையில் தான் உள்ளது என்று கூறினால் அது மிக ஆகாது. ஒரு உயிர் கருவில் உருவாவதில் இருந்து உலகத்தை கவனிக்கும் விதத்திலும், அதனை பண்பாக வளர்க்கும் விதத்திலும் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது அன்னையர்கள் தான்.

அன்னையின் பாதத்தில் சொர்க்கம்..  இறை நூல்கள் கூறும் தத்துவம்.. அன்னையர் தின வாழ்த்துகள்
அன்னையின் பாதத்தில் சொர்க்கம்.. இறை நூல்கள் கூறும் தத்துவம்.. அன்னையர் தின வாழ்த்துகள்

ட்ரெண்டிங் செய்திகள்

மிகப்பெரிய இலக்கியத்தைக் கொண்டது தமிழ் மொழி. கடவுளுக்கும் மேலாக தாய்மையை கொண்ட அன்னையை உயர்த்தி அனைத்து இலக்கியங்களும் புகழ்ந்து பாடி உள்ளன. வெளி உலகத்தில் ஏற்படக்கூடிய அனைத்து சிக்கல்களையும் ஆண்கள் எதிர் கொண்டாலும் கருவில் தாங்கும் போது பல எதிர்ப்புகளை தாண்டி பெருமையோடு தன் குழந்தையை பெற்றெடுப்பது ஒரு அன்னை தான்.

குடும்பம், குழந்தை, உறவினர், வேலை, சுற்று புறத்தார் என பல்வேறு விதமான சவால்களை அனுசரித்து எதிர்கொண்டு பல சாதனைகளை படைப்பது உண்மைதான். அனைவருடைய பராமரிப்பிற்கும் நம்பிக்கையாக விளங்கக்கூடியது அன்னை தான். அடுத்த சந்ததிகளில் உலகிற்கு கொடுத்து இந்த உலகத்தை கட்டமைப்பது அன்னையர்கள் தான்.

ஒரு நாட்டின் எதிர்காலம் ஒரு தாயின் கையில் தான் உள்ளது என்று கூறினால் அது மிக ஆகாது. ஒரு உயிர் கருவில் உருவாவதில் இருந்து உலகத்தை கவனிக்கும் விதத்திலும், அதனை பண்பாக வளர்க்கும் விதத்திலும் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது அன்னையர்கள் தான்.

ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் களிமண் தன் கையில் இருந்தால் கூட அதனை அழகிய சிற்பமாக மாற்றக்கூடிய திறன் கொண்டவர்கள் அன்னையர்கள். இந்த உலகம் சீராக பயணம் செய்வதற்கு காரணம் அன்னையர்கள் தான் மனித சமுதாயத்திற்கு தேவையான பொறுப்புகளின் ஆளுமைகளை இந்த உலகிற்கு கொடுப்பது அன்னையர்கள் தான்.

உலகமே எதிர்த்தாலும் தன் குழந்தைகளுக்காக எதையும் செய்யக் கூடியவர் அன்னை. சமுதாயத்தில் மிகப்பெரிய ஆளுமைகளை உருவாக்குவதில் எப்போதும் அன்னையர்கள் தெளிவாக இருப்பார்கள்.

உலகம் தொடங்கியதில் இருந்து இன்று வரை பெண்களின் தனித்தன்மை உச்ச நிலையில் இருப்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இருப்பினும் எப்போதும் பெண்களின் தனித்தன்மை உயர்வாக இருக்க வேண்டும். ஏனென்றால் மனிதர்களின் உயர்வை திறக்கும் சாவியாக அன்னையர்கள் இருந்து வருகின்றனர்.

உலகமே தலைகீழாக விழுந்தாலும் எதனையும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அன்னையர்கள் சிறு துரும்பு தனது குழந்தைகள் மீது விழுந்தாலும் மனமுடைந்து கீழே விழுந்து விடுவார்கள். எப்போதும் உழைப்பு, எதிலும் உழைப்பு, தனக்கானவர்களுக்கான உழைப்பு, இந்த சமூகத்திற்கான உழைப்பு உலகத்தை வழிநடத்துவதற்கு உழைப்பு என உழைப்பின் அடையாளமாக அன்னையர்கள் திகழ்ந்து வருகின்றனர்.

ஆகாயத்தை போல எப்போதும் அறிவை விரிவாக்கி தனக்கானவர்களுக்காக அடங்கி அடிமை போல் உழைக்கும் ஒரு சுமை தாங்கி தான் அன்னையர்கள். இன்று வரை அது அருமை புரியாத எத்தனையோ குழந்தைகள் மடமை வாதியாக திரிந்து வருகின்றனர். கொண்ட கொள்கையில் இருந்து நகராத முதல் ஆளுமை அன்னையர்கள் தான்.

தாயின் பாதத்தில் இருக்கின்றது சொர்க்கம் என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. கடவுளின் உத்தரவு வருவதற்கு முன்பே தாய்க்காக தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். தாயிடம் வேலை வாங்கி அசுரர்களை அழித்தார் முருக பெருமான். இப்படி கடவுள்களுக்கே கடவுளாக அன்னையர்கள் திகழ்ந்துள்ளனர்.

தாயின் வார்த்தைகளை உள்வாங்கி அவர்களின் பாதம் தொட்டு அவர்கள் பாதையிலே செல்வதுதான் மோட்சத்திற்கான வழி என இறை நூல்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட அன்னையை இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்தி வணங்குவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்