Adolf Hitler:'நல்லவரா.. கெட்டவரா':ஒரு பக்கம் வறுமை.. மறுபக்கம் 40ஆயிரம் குழந்தைகளைக் கொன்ற அரக்கன் - ஹிட்லரின் மறுபக்கம்
Adolf Hitler: சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் நினைவுநாள் தொடர்பான கட்டுரை

Adolf Hitler: ஜெர்மனை 1933ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர், அடால்ஃப் ஹிட்லர். இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய மூளையாக இருந்தவர். கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினரான யூதர்கள் மீதான கடும் எதிர்ப்பு, கம்யூனிஸ எதிர்ப்பு, ஜெர்மனியைப் பெரிதாக்கப் பார்த்தது என்பது தான் ஹிட்லரின் பார்வையாக இருந்தது. அவரது ஆட்சியின்போது யூதர்கள் நாடு கடத்தப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். அவரைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணற்ற சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த அடால்ஃப் ஹிட்லர்?அலாய்ஸ் ஹிட்லருக்கும் அவரது மூன்றாவது மனைவி கிளாரா போல்ஸுக்கும் நான்காவது குழந்தையாக ப் பிறந்தவர், ஹிட்லர். பிறப்பில் ஜெர்மனுக்கு அருகிலுள்ள ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்தவர். இவருடன் பிறந்த நால்வர் நோயின் காரணமாக இறந்துவிட, இவரை விட ஏழு வயது சிறிய தங்கை பவுலா ஹிட்லர் மட்டும் குடும்பத்தில் இருந்தார்.
சிறுவயதில் தன் தாயையும் தன்னையும் தந்தை அலாய்ஸ் கொடுமைப்படுத்தியதாக, ’’மெயின் கேம்ப்’’ என்னும் சுயசரிதைப் புத்தகத்தில் எழுதியிருப்பார். இதனால் தாய் மீது மிகவும் பாசமாக இருந்தார். 1903ஆம் ஆண்டு,ஹிட்லரின் 14 வயதில் அவரது தந்தை மரணம் எய்தினார். ஆரம்பத்தில் நன்கு படித்த ஹிட்லர், பின் ஓவியத்தில் ஆர்வம் காட்டினார்.
