பதிலடிக்கு காத்திருங்கள்.. விமானப்படை தள தாக்குதலுக்கு பின் இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்
இந்திய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானின் பதிலடிக்கு இந்தியா காத்திருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பதிலடிக்கு காத்திருங்கள்.. விமானப்படை தள தாக்குதலுக்கு பின் இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்
இந்திய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் பாகிஸ்தானின் மூன்று விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு இன்று சனிக்கிழமை அதிகாலையில் கூறியது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சவுத்ரி இஸ்லாமாபாத்தில் அதிகாலை 4 மணியளவில் அவசரமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.
பாகிஸ்தான் விமான தளங்கள் மீது தாக்குதல்
ராவல்பிண்டி மாவட்டம் சக்லாலாவில் உள்ள நூர் கான் விமான தளம், ஜாங் மாவட்டம் ஷோர்கோட்டில் உள்ள ரதிஃபிகி விமான தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரித் விமான தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளம், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
