‘துக்கம் ஆழமானது.. ஆனால் அன்பு அதை விட ஆழமானது’ இறந்த மகனின் கனவை நிறைவேற்றிய தந்தை!
மாடலிங் செய்ய வேண்டும் என்ற மறைந்த மகனின் கனவை நனவாக்க, தந்தை ஒருவர் மேடையில் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த நெகிழ்ச்சியான கதை.
18 வயது மகனை இழந்த ஒருவர், மகனின் விருப்பத்தை நிறைவேற்ற எடை குறைத்து மாடலிங் மேடையில் நடந்த கதை, பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. ஹோலி பண்டிகையின் போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் நவீன் கம்போஜ் தனது மகனை இழந்தார். அதன் பிறகு, தனது மறைந்த மகனுக்கு மரியாதை செய்யும் வகையில் மாடல் ஆக முடிவு செய்தார்.
மன அழுத்தத்துடன் போராடி 55 வயதில் மாடலிங் பயணத்தைத் தொடங்கிய தினேஷ் மோகன், கம்போஜுக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். மேடையில் நடந்து வரும் அப்பாவின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
"இது இழப்பு மற்றும் சோகத்தின் கதை, அதே சமயம் அசாதாரணமான தைரியத்தின் கதையும் கூட... நன்று நவீன் கம்போஜ். கடந்த ஆண்டு ஹோலி அன்று நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் தனது அழகான 18 வயது மகனை அவர் இழந்தார்," என்று மோகன் தன் பதிவில் எழுதியுள்ளார். மேலும், கம்போஜ் தன்னை அணுகி, "தனது மறைந்த மகனின் நினைவைப் போற்றும்" வகையில் மாடலாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.
"தன்னம்பிக்கையின் மூலம், (கம்போஜ்) மனச்சோர்விலிருந்து மீண்டு, பல கிலோ எடையைக் குறைத்தார்," என்று மோகன் மேலும் கூறினார். "துக்கம் ஆழமானது, ஆனால் அன்பு அதைவிட ஆழமானது" என்று தனது பதிவை அவர் முடித்தார்.
வீடியோவைப் பாருங்கள்:
சமூக ஊடகங்கள் உணர்ச்சிவசப்படுகின்றன:
இந்த பதிவை கண்டு பலரும் உணர்ச்சிவசப்பட்டனர். அவ்வாறு சிலர், அதற்கு ஆற்றிய எதிர்வினை இதோ: “கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று ஒருவர் எழுதியிருந்தார். மற்றொருவர், “ஓ என் கடவுளே. இந்த தைரியமான மனிதருக்கு சல்யூட்” என்று கூறியிருந்தார். மற்றொருவர் “இந்த மனிதருக்கு நிறைய அன்பு மற்றும் ஆயிரக்கணக்கான அரவணைப்புகள்” என்று எழுதினார்.
ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், கம்போஜ் தனது மகனின் மரணம் மற்றும் தனது மாடலிங் பயணம் பற்றி மனம் திறந்தார். அவர் தனது மற்றும் தனது மகனின் கனவுகள் பற்றிப் பேசினார். மேலும், தனது குழந்தை “18 வயதில் ஒரு சோகமான எதிர்பாராத சம்பவத்தில்” இறந்துவிட்டதாகக் அனர் கூறினார்.
“தாங்க முடியாத துக்கம்”
“கரண் எங்களை விட்டுப் பிரிந்தபோது, அந்தக் கனவுகளை நனவாக்குவது சாத்தியமற்றது போல் உணர்ந்தேன். ஒரு வருடம், தாங்க முடியாத துக்கத்தின் நிழலில் வாழ்ந்தேன், அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரது முதல் நினைவு நாளில், நானே ஒரு வாக்குறுதியை அளித்தேன்: அவரது நினைவைப் போற்றும் வகையில், என் சொந்த வழியில் அவரது கனவுகளை நனவாக்குவேன்," என்று கம்போஜ் எழுதியுள்ளார்.
அதிக எடை இழப்பு:
தனது மாடலிங் பயணத்தைத் தொடங்கியபோது தனது எடை 100 கிலோவாக இருந்ததாகவும், ஆனால் தனது மனைவி, மகள் மற்றும் இளைய மகனின் உதவியுடன், தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தடையை குறைக்க முடிந்தது என்றும் கம்போஜ் கூறினார். தனது மாடலிங் பயணத்தில் தனக்கு உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
டாபிக்ஸ்