Pakistan Mosque Blast:பாக்., மசூதியில் குண்டு வெடிப்பு: 30க்கும் அதிகமானோர் பலி
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று நிகழ்ந்த நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.
பெஷாவர் என்னும் இடத்தில் உள்ள பிரபல பள்ளிவாசல் முன்பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் குறைந்தது 32 பேர் உயிரிழந்தனர். 145-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு வளாகத்தில் உள்ள மசூதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பு கடந்த 11 மாதங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் எனக் கருதப்படுகிறது.
பெஷாவரில் திங்கள்கிழமை மதியம் தொழுகையின் போது, நகரின் காவல்துறை தலைமையகம் மற்றும் பிற அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிக்குள் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஆளுநர் குலாம் அலி தெரிவித்தார்.
பெஷாவர் காவல் துறை தலைவர் முகமகு இஜாஸ் கான் கூறுகையில், "இந்தத் தாக்குதல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானதாகும். மசூதியில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
இந்த கொடூர தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
Omar Esa: வாழ்க்கையில் இந்தியா பிரச்சனை செய்கிறது - பாகிஸ்தான் பாடகர்
ஆப்கானிஸ்தான் குழுவுடன் தொடர்பு கொண்ட தீவிரவாதக் குழுவான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் அரசாங்கத்துடனான போர்நிறுத்தத்தை முடித்துக்கொண்டதாகவும், நாடு முழுவதும் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதாகவும் அறிவித்தது.
இஸ்லாமாபாத்தை தளமாகக் கொண்ட பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஃபார் கான்ஃபிக்ளிக்ட் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸின் கூற்றுப்படி, 2021 உடன் ஒப்பிடும்போது 2022 இல் தீவிரவாத வன்முறை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், 60க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்களைக் கொன்ற ஷியா மசூதி மீதான தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.