விசித்திரமான சம்பவம்.. ஆணுறையால் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை சாப்பிட்ட நபர்!
US Man ate Condom Wrapped Banana: ஆணுறையால் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை மனிதன் சாப்பிட்டது போன்ற சம்பவம் உலகிலேயே முதல்முறையாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன உளைச்சலில் சிலர் நாணயங்களை விழுங்குவதும், தெரியாமல் சிலர் இரும்பு குண்டுகளை விழுங்குவதும் அதை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றுவதும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஆணுறையால் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை மனிதன் சாப்பிட்டது போன்ற சம்பவம் உலகிலேயே முதல்முறையாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். எந்த உணவும் உட்கொள்ள முடியவில்லை என்றும் எந்த பானமும் குடிக்க முடியவில்லை எனவும் மருத்துவரிடம் முறையிட்டுள்ளார். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கழிப்பறைக்கு கூட செல்லவில்லை என்றும் அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அதில், அந்த நபரின் வயிற்றுக்குள் சிறுகுடலைத் தடுக்கும் வகையில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழைப்பழம் தடையாக இருந்ததை கண்டறிந்தனர். இதனைக்கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
மன நோயாளியான இவர் கவனக்குறைவாக இதை உட்கொண்டிருக்காலம் என எண்ணிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கும் தயாராகினர். அதைத் தொடர்ந்து மேற்கொண்ட அறுவை சிகிச்சையில் அதிர்ஷ்டவசமாக அவரது சிறுகுடல் பகுதியில் இருந்த ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழத்தை மருத்துவ நிபுணர்கள் வெளியே எடுத்துள்ளனர். அதன் பிறகு அவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் உணவு சாப்பிட்டு வெளியேற்றும் அளவிற்கு அவர் குணமடைந்தார். மூன்று நாட்களுக்கு பின் அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இந்த வார தொடக்கத்தில் கியூரியஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டது. அந்த இதழில், இதுபோன்ற வழக்கு உலகிலேயே முதல்முறையாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ரைச்சூர் மாவட்டத்திலுள்ள லிங்சுகூர் நகரில் வசிக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட தியாமப்பா ஹரிஜன் என்ற நபரின் வயிற்றிலிருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.