Fact Check : 80ஸ், 90ஸ் கிட்ஸ்ஃபேவரைட்.. கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதா? இது உண்மையா? இதோ பாருங்க!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check : 80ஸ், 90ஸ் கிட்ஸ்ஃபேவரைட்.. கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதா? இது உண்மையா? இதோ பாருங்க!

Fact Check : 80ஸ், 90ஸ் கிட்ஸ்ஃபேவரைட்.. கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதா? இது உண்மையா? இதோ பாருங்க!

Fact Crescendo HT Tamil
Jul 16, 2024 02:47 PM IST

fact check : 30 வருடங்களாக இயங்கிவந்த கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

80ஸ், 90ஸ் கிட்ஸ்ஃபேவரைட்.. கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதா? இது உண்மையா? இதோ பாருங்க!
80ஸ், 90ஸ் கிட்ஸ்ஃபேவரைட்.. கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதா? இது உண்மையா? இதோ பாருங்க!

இதுகுறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு ஃபேக்ட் கிரஸண்டோ தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம்

கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது
கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது

சமூகவலைத்தளங்களில் “ கார்ட்டூன் நெட்வொர்க் நேற்று அதிகாரபூர்வமாக மூடப்பட்டது..!

cartoonnetwork “ என இம் மாதம் 12ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு (12.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

உண்மை அறிவோம்

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வார்னர் பிரதர்ஸ்க்கு சொந்தமான கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனம், அமெரிக்க கேபிள் தொலைக்காட்சி சேனல் ஆகும். கார்ட்டூன் நெட்வொர்க் குறித்த நிறுவனம் மூடப்பட்டதா என்று ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வினை மேற்கொண்ட போது, கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு வதந்தி பரவியது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வினை மேற்கொண்டது.

அப்போது கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ‘’நாங்கள் இன்னும் மரணிக்கவில்லை,’’ என்று பதிவிட்டிருந்தமை ஃபேக்ட் கிரஸண்டோவுக்கு காணக்கிடைத்தது.

உண்மை இல்லை

மேலும் இரு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அதே தகவல் பரவுகின்றமைக்கான காரணத்தினை நாம் ஆய்வு செய்தோம். அப்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் பல அனிமேஷன் நிபுணர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அவர்கள் ஒன்றிணைந்து கார்ட்டூன் நெட்வொர்க்கை கிண்டல் செய்யும் விதமாக #RIPcartoonnetwork என்ற ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள் என்று கூறி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தமையே காரணம் என தெரியவந்தது.

இது குறித்து ‘Hindustan Times’ கார்ட்டூன் நெட்வொர்க் நிறுவனத்திடம் வினவியபோது, கார்ட்டூன் நெட்வொர்க் அல்லது ஸ்டுடியோ மூடப்படும் என்று சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை, என தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தமையும் எமது ஆய்வில் காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கார்ட்டூன் நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் நிர்வாகம் மறுப்பு

80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் பலரும் கார்ட்டூன் நெட்வொர்க் உடனான தங்களது நினைவுகளை சோகத்துடன் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தகவலுக்கு கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறது என்று வரும் தகவல்களில் உண்மை இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறோம். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பல நிகழ்ச்சிகளுடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் புதுமையான உள்ளடக்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

முடிவு

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் ஃபேக்ட் கிரஸண்டோ-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.