தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  765 Fresh Corana Cases In One Day In Kerala And Three People Die

கேரளாவில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா – தமிழகத்திலும் அதிகரிக்கும் அபாயம்

Priyadarshini R HT Tamil
Mar 31, 2023 11:31 AM IST

Corona Updates : கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 765 புதியகொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு மாதத்தில் 20 கொரோனா இறப்புகள் நடந்துள்ளன. அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஐசியூவில் உள்ள பெரும்பாலான நோயாளிகளும்வயதானவர்கள். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம்போன்ற நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். என்று அவர் கூறினார்.தொடர்ந்து 

இந்தியாவில் ஒரு நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,095ஆக உள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது. நோயிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4,41,69,711 ஆகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் உள்ளது. ஒரே நாளில் 3,095 புதிய கோவிட் தொற்றாளர்கள் தோன்றியதை அடுத்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது. 5 பேர் இறந்ததையடுத்து கொரோனாவால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 5,30,867 ஆக உள்ளது. கோவா மற்றும் குஜராத்தில் ஒருவரும், கேரளாவில் 3 பேரும் இறந்துள்ளனர். கோவிட் தொற்று ஏற்பட்டு மீள்பவர்கள் 98.78 சதவீதமாக உள்ளது. 6 மாதத்திற்கு பின்னர் ஒரே நாளில் 3,016 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடைசியாக அக்டோபர் 2ம் தேதி 3,375 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்