Gujarat Fire: குஜராத் ரசாயன ஆலை தீ விபத்து.. கருகிய நிலையில் 7 உடல்கள் மீட்பு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gujarat Fire: குஜராத் ரசாயன ஆலை தீ விபத்து.. கருகிய நிலையில் 7 உடல்கள் மீட்பு!

Gujarat Fire: குஜராத் ரசாயன ஆலை தீ விபத்து.. கருகிய நிலையில் 7 உடல்கள் மீட்பு!

Karthikeyan S HT Tamil
Nov 30, 2023 11:51 AM IST

குஜராத்தின் சச்சின் ஜிஐடிசி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

குஜராத், சூரத் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து நிகழ்ந்தது.
குஜராத், சூரத் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து நிகழ்ந்தது.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள சச்சின் ஜிஐடிசி பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலையில் புதன்கிழமை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஆலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரியக்கூடிய இரசாயனங்கள் கசிந்ததைத் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டு தீ பிழம்புகளும் புகைமூட்டமாக இருந்துள்ளது. 

இதுகுறித்து சூரத் நகர தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 9 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தநிலையில் இந்த விபத்தில் சிக்கியவர்களில் 7 பேரின் உடல்களை மீட்புப்படையினர் இன்று மீட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 24 பேர் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் திவ்யேஷ் படேல், சந்தோஷ் விஸ்வகர்மா, சனத் குமார் மிஸ்ரா, தர்மேந்திர குமார், கணேஷ் பிரசாத், சுனில் குமார் மற்றும் அபிஷேக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, இதுகுறித்து சூரத் நகர தலைமை தீயணைப்பு அதிகாரி பசந்த் பரீக் கூறுகையில், தீ விபத்தில் காயமடைந்த 24 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்தபோது தொழிற்சாலைக்குள் எத்தனை தொழிலாளர்கள் இருந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை." என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் 7 பேரின் உடல்களை மீட்புப்படையினர் இன்று மீட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.