கேதார்நாத் கோவிலுக்கு அருகில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி - கடந்த 2 மாதங்களில் 5வது சம்பவம்! என்ன நடந்தது?
கேதார்நாத் ஹெலிகாப்டரில் இருந்து அதிகாலை 5 மணியளவில் ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர் புறப்பட்டு, அதிகாரிகளுக்கு சிக்னல் கிடைக்காததால் "காணாமல் போனது".

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்திலிருந்து குப்த்காஷிக்கு ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை துவங்கி நிலையில் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் இந்த மாதம் 3ம் தேதி திறக்கப்பட்டது. கேதார்நாத் ஹெலிகாப்டரில் இருந்து காலை 5.20 மணியளவில் புறப்பட்ட ஆர்யன் ஏவியேஷன் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர், பின்னர் அதிகாரிகளுக்கு சிக்னல் கிடைக்காததால் "காணாமல் போனது". மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) இன்ஸ்பெக்டர் அனிருத் பண்டாரி கூறுகையில், "ஹெலிகாப்டரில் இருந்த ஏழு பேரும் இறந்துவிட்டனர்." பலியானவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கேப்டன் ராஜ்வீர் சிங் சவுகான் (பைலட்); ராஜ்குமார் சுரேஷ் ஜெய்ஸ்வால் (41), ஷ்ரதா ராஜ்குமார் ஜெய்ஸ்வால் (35), காஷி (23 மாதங்கள்), மகாராஷ்டிராவைச் சேர்ந்த விக்ரம் (46), ருத்ரபிரயாக் பகுதியைச் சேர்ந்த வினோத் தேவ் (66), மற்றும் உ.பி.யின் பிஜ்னோரைச் சேர்ந்த துஸ்தி சிங் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ருத்ரபிரயாக் ஹெலிகாப்டர் சேவைக்கான நோடல் அதிகாரியாகவும் இருக்கும் மாவட்ட சுற்றுலா அதிகாரி ராகுல் சௌபே கூறுகையில், "இன்று காலை ஹெலிகாப்டர் காணாமல் போனது குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கேதார்நாத் தாமில் இருந்து குப்த்காஷியில் உள்ள அதன் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பள்ளத்தாக்கில் திடீரென பாதகமான வானிலை ஏற்பட்டது. விமானி ஹெலிகாப்டரை பள்ளத்தாக்கிலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்றார்; இருப்பினும், அந்த முயற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானது." "விமானத்தில் விமானி, ஐந்து பயணிகள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் இருந்தனர்," என்று அவர் கூறினார்.