Nepal landslide: நேபாள நிலச்சரிவில் சிக்கி 7 இந்தியர்கள் உள்பட 50 பேர் மாயம்; 3 பேர் மீட்பு - முக்கியப் புள்ளிகள்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Nepal Landslide: நேபாள நிலச்சரிவில் சிக்கி 7 இந்தியர்கள் உள்பட 50 பேர் மாயம்; 3 பேர் மீட்பு - முக்கியப் புள்ளிகள்!

Nepal landslide: நேபாள நிலச்சரிவில் சிக்கி 7 இந்தியர்கள் உள்பட 50 பேர் மாயம்; 3 பேர் மீட்பு - முக்கியப் புள்ளிகள்!

Marimuthu M HT Tamil
Jul 12, 2024 03:35 PM IST

Nepal landslide: நேபாள நிலச்சரிவில் சிக்கி 7 இந்தியர்கள் உள்பட 50 பேர் மாயம் ஆகியுள்ளனர் எனவும், 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

 Nepal landslide: நேபாள நிலச்சரிவில் சிக்கி 7  இந்தியர்கள் உள்பட 50 பேர் மாயம்; 3 பேர் மீட்பு - முக்கியப் புள்ளிகள்!
Nepal landslide: நேபாள நிலச்சரிவில் சிக்கி 7 இந்தியர்கள் உள்பட 50 பேர் மாயம்; 3 பேர் மீட்பு - முக்கியப் புள்ளிகள்! (PTI)

திரிசூலி ஆற்றில் என்ன நடந்தது?

நேபாளத்தில் சித்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்-முகலிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள், திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

சித்வானின் தலைமை மாவட்ட அதிகாரி இந்திரதேவ் யாதவ் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் கூறுகையில், ’’பேருந்துகள் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. அவை சாலையிலிருந்து கீழே பொங்கி எழும் ஆற்றில் தள்ளப்பட்டன’’ என்றார். 

நேபாள நிலச்சரிவு குறித்த சமீபத்திய தகவல்கள்:

  1. நேபாளத்தின் அதிகாலை 3 மணியளவில் இரண்டு பேருந்துகளும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. நேபாளத்தில் உள்ள மதன்-அஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 63 பேரை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அந்தப் பேருந்துகளின் பெயர் ஏஞ்சல் பேருந்து மற்றும் கணபதி டீலக்ஸ் பேருந்து ஆகியவை ஆகும். 
  2. நேபாளத்தில் பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பு நிலச்சரிவில் இருந்து மூன்று பயணிகள் தப்பிக்க முடிந்தது என்று கூறப்படுகிறது. அவர்கள் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
  3. நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் உள்ள மத்திய மாவட்டமான சித்வானில், பேருந்துகள் திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு முன்பு, தப்பிப் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணித்துறை அதிகாரிகளை திரட்டியுள்ளதாக ஏ.எஃப்.பி தெரிவித்துள்ளது.
  4.  இந்த இரண்டு பேருந்துகள் முறையே காத்மாண்டுவில் இருந்து கவுர் செல்லும் பேருந்தில் 41 பேரும், பிர்குஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பேருந்தில் 24 பேரும் இருந்தனர்.
  5.  நேபாள நாட்டில் இன்று(ஜூலை 12) காலை, மூன்றாவது பேருந்து நிலச்சரிவில் சிக்கியதில் ஓட்டுநர் உயிரிழந்தார் என்று அரசாங்க நிர்வாகி கிமா நானாடா பூசால் தெரிவித்தார்.
  6. காத்மாண்டுவிலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் மூன்று வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 10 பேர் உயிரிழந்ததாகவும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் டான் பகதூர் கார்கி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
  7.  ஜூலை 11 இரவு, நேபாளத்தில் ரிசார்ட் நகரமான பொக்காரா அருகில், ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பம் நிலச்சரிவில் உயிரிழந்தது.  அனைவரும் குடும்பத்தில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அந்த குடிசை நிலச்சரிவால் நசுங்கியதுடன், அப்பகுதியில் மேலும் மூன்று வீடுகளும் சேதமடைந்தன.
  8. ஜூன் நடுப்பகுதியில் இருந்து நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர்.
  9. பி.டி.ஐ செய்திமுகமை வெளியிட்டுள்ள தகவலின்படி, பருவமழை பேரழிவுகளால் பத்து ஆண்டுகளில் 1,800-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 400 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 1400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
  10. நேபாள வெள்ள நிலைமை குறித்து அந்நாட்டு பிரதமர் புஷ்ப கமல் தஹால் வேதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களை அரசு அமைப்புகள் தேடி வருவதாக 'எக்ஸ்' பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(செய்தி நிறுவனங்களின் உள்ளீடுகளுடன்)

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.