Haryana: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 6 இளைஞர்கள் சாலை விபத்தில் பரிதாப பலி!
திருமணத்திற்கு சென்ற 6 இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 6 இளைஞர்கள் மரத்தில் கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் ஹிசர் மாவட்டத்தில் அதிகாலை 7 இளைஞர்கள் ஒரு காரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அரோகா - அடம்பூர் சாலையில் கிஷன்கர் பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த சாஹர் (வயது 23), சோபித் (22), அரவிந்த் (24), அபினவ் (22), தீபக் (23) ஆகிய 6 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் புனேஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த இளைஞர்களின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேசமயம் காரை அதிவேகமாக இயக்கியதே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியான நிலையில். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.