Car Crashes: உ.பி.யின் முசாபர்நகரில் கார் விபத்தில் 6 பேர் பலி-6 dead in ups muzaffarnagar after car crashes into 22 wheeler truck - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Car Crashes: உ.பி.யின் முசாபர்நகரில் கார் விபத்தில் 6 பேர் பலி

Car Crashes: உ.பி.யின் முசாபர்நகரில் கார் விபத்தில் 6 பேர் பலி

Manigandan K T HT Tamil
Nov 14, 2023 10:58 AM IST

ஆறு பேரும் டெல்லியில் இருந்து ஹரித்வார் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கார் 22 சக்கர லாரி மீது மோதியது.

அப்பளம் போல் நொறுங்கிய கார்
அப்பளம் போல் நொறுங்கிய கார் (PTI)

தேசிய நெடுஞ்சாலை-58ல் அதிகாலை 4 மணியளவில் இந்த bfhldlg ஏற்பட்டது. போலீசார் மிகுந்த முயற்சியுடன் வாகனத்தில் இருந்து உடல்களை வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

NDTV படி, ஆறு பேரும் டெல்லியிலிருந்து ஹரித்வார் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கார் பின்னால் இருந்து 22 சக்கர டிரக் மீது மோதியது. அவர்கள் அனைவரும் டெல்லியில் வசிப்பவர்கள். சம்பவம் நடப்பதற்கு முன் கார் அதிவேகத்தை அடைந்ததால் டிரைவரின் ஸ்டியரிங் கட்டுப்பாட்டை இழந்தது.

மற்றொரு சம்பவத்தில், சஹ்ரான்பூரில் சனிக்கிழமையன்று 32 வயதுடைய நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை பின்னால் இருந்து டிராக்டர் மோதியதில் உயிரிழந்தார். சாகர் ஜெயின் தீபாவளிக்காக ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.