பனிக்குவியலில் கார் சிக்கி 4 பேர் பலி!
மங்கோலியாவில் பனி குவியலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மங்கோலியா நாட்டில் பனி குவியலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மங்கோலியா நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இதன் காரணமாக சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சுக் பாதர் மாகாண நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த பனிக் குவியலில் அந்த கார் சிக்கிக் கொண்டது.
இதில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் மூச்சுத்திணறில் உயிரிழந்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காரை மீட்டனர். காருக்குள் சடலமாக இருந்த நான்கு பேரும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டாபிக்ஸ்