Mumbai: ‘டாக்ஸியை நிறுத்துங்கள்’.. திடீரென்று கடலில் குதித்து தற்கொலை செய்த இளைஞர்! - நடந்தது என்ன?
27 வயதான இளைஞர் ஒருவர் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்
பன்னாட்டு வங்கி ஒன்றில், உயர் பொறுப்பில் பணியாற்றி வந்த 27 வயது இளைஞர் ஒருவர், வெள்ளிக்கிழமை இரவு பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குர்தா - பைஜாமா உடையணிந்து டாக்ஸி ஒன்றில் ஏறிய அவர் பிகேசியில் இருந்து பரேலுக்கு ட்ரைவரை செல்ல சொல்லி இருக்கிறார். டாக்ஸியில் இருந்த அவர் இரவு 8 மணியளவில், கைப்பேசி கீழே விழுந்து விட்டதாக கூறி வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து டாக்ஸி நின்றவுடன் கீழ் இறங்கிய அவர், எதிர்பார்க்காத விதமாக கடலில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து டாக்ஸி ட்ரைவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து கடலோர காவல் துறையினர், படகு மற்றும் மீனவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டனர். அவர் பாந்த்ராவில் உள்ள பாபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இரவு 9.45 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக போலீசார் கூறினர்.
அவரது சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டை மூலம் அவர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்.
இது குறித்து போலீசார் கூறும் போது, “"நாங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டோம், அவர்கள் அவருடைய தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் நாங்கள் அவரது தந்தையிடம் பேசினோம்.
அவர் பரேலில் வசிப்பவர் என்பதைக் கண்டுபிடித்தோம். ஒரு பன்னாட்டு வங்கியில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த 2018ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்திருக்கிறார்.
அவருக்கு அண்மையில்தான் காதல் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. ஆகையால் இதுதான் அவரது தற்கொலைக்கு காரணம் என்று சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது” என்று கூறினர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
டாபிக்ஸ்