Tamil News  /  Nation And-world  /  2 Police Commandos Shot Dead In Manipur Gunfight

Manipur Gunfight: மணிப்பூரில் ராக்கெட் மூலம் துப்பாக்கி சூடு! 2 போலீஸ் கமாண்டோக்கள் உயிரிழப்பு - 5 பேர் காயம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 18, 2024 07:00 AM IST

துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்த மோரே பகுதிக்கு பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு மருந்துகளை கொண்டு செல்ல மணிப்பூர் அரசு, மத்திய அரசிடம் ஹெலிஹாப்டரை கோரியுள்ளது.

மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் கமாண்டோக்கள் உயிரிழப்பு
மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு போலீஸ் கமாண்டோக்கள் உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஆண்டு மே மாதத்தில் மணிப்பூர் மாநிலத்தில் இன மோதல்கள் ஏற்பட்டது. இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மணிப்பூர் காவல்துறை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைகள் (சிஏபிஎஃப்) ஆகியவற்றை சேர்ந்தவர்கள் மீது புதன்கிழமை அதிகாலை 3.30 துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டது. அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில், ராக்கெட் மூலம் இயக்கப்படும் துப்பாக்கி குண்டுகள் வீசப்பட்டது என அதிகாரிள் தெரிவித்துள்ளனர்.

பயங்காரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் டபிள்யூ சோமோர்ஜித் மற்றும் தகேலம்பம் சைலேஷ்வர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

"பயங்காரவாதிகள் தாக்குதல்களில் இரண்டு போலீஸ் கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர். மோரேவில் நிலைமை தொடர்ந்து பதட்டமாக உள்ளது" என்று தெங்னோபால் காவல்துறை கண்காணிப்பாளர் ரஹுயில் குப்தா தொலைபேசியில் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதலே முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், மணிப்பூர் அரசு மோரேவுக்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெடிமருந்துகளை விமானம் மூலம் கொண்டு செல்ல மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஹெலிகாப்டரைக் கோரியுள்ளது.

சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து வருவதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதாக என மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மணிப்பூரில் மாநிலம் மோரேவில் நிகழும் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் எனவும், அங்கு மருத்துவ அவசரநிலை எப்போது வேண்டுமானாலும் எழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பணியாளர்கள், வெடிமருந்துகள் போன்றவற்றை மோரேவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக" உள்துறை அமைச்சகத்தின் காவல்துறை -2 பிரிவின் கூடுதல் செயலாளருக்கு கமிஷனர் (உள்துறை) டி ரஞ்சித் சிங் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்