Accident : பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்.. தலை நசுங்கி பலியான சோகம்!
மும்பையில் மைனர் நண்பர் ஓட்டிய ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து சென்ற 16 வயது சிறுமி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
மும்பை: மைனர் நண்பர் ஓட்டிய இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 16 வயது சிறுமி சாலை விபத்தில் உயிரிழந்தார். வசாய் மேற்கில் உள்ள திவான் மான் பகுதியில் வசிக்கும் குஷி பராப், நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது.
சனிக்கிழமை மாலை ரமிடி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. வசாய் போலீசாரின் கூற்றுப்படி, பரப் மற்றும் அவரது 17 வயது நண்பர் ஆக்டிவா ஸ்கூட்டரில் பிறந்தநாள் விழாவிற்கு சென்று கொண்டிருந்தபோது, அதிவேகத்தில் திரும்பி எதிர் திசையில் வந்த டெம்போ மீது நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது.
மோதியதில் ஸ்கூட்டர் வழுக்கி விழுந்தது. "பின்னால் அமர்ந்திருந்த சிறுமி தரையில் விழுந்து டெம்போவின் டயரின் கீழ் நசுங்கினார்" என்று வசாய் காவல் நிலைய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஸ்கூட்டரை ஓட்டியவர் 17 வயது என்றும், அவரது கையில் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். "சிறுவன் மைனர் என்பதால், அவனிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை" என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டியது அவனது பெற்றோருக்கு தெரியுமா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்