Chhattisgarh Encounter: சத்தீஸ்கரில் ஒரே நாளில் 16 நக்சலைட்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை; 2 வீரர்கள் காயம்!
Chhattisgarh Encounter: சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா-தண்டேவாடா எல்லை பகுதியில் நடந்த என்கவுன்டரில் 16 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா-தண்டேவாடா எல்லையில் உள்ள உபம்பள்ளி கேர்லபால் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 16 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு ஜவான்கள் காயமடைந்தனர்.
சுக்மா-தண்டேவாடா எல்லைப் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பது குறித்த உளவுத்தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில், மாவட்ட ரிசர்வ் காவலர் (டி.ஆர்.ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்று அதிகாலை கெர்லாபால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரின் கூட்டுக் குழு நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 16 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.