திடீர் வெள்ளத்தால் திக்குமுக்காடும் சிக்கிம்..14 பேர் பலி..ராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் மாயம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  திடீர் வெள்ளத்தால் திக்குமுக்காடும் சிக்கிம்..14 பேர் பலி..ராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் மாயம்

திடீர் வெள்ளத்தால் திக்குமுக்காடும் சிக்கிம்..14 பேர் பலி..ராணுவ வீரர்கள் உட்பட 100 பேர் மாயம்

Karthikeyan S HT Tamil
Oct 05, 2023 09:18 AM IST

Sikkim Flash Floods: சிக்கிம் மாநிலத்தில் திடீரென பெய்த அதீத கனமழை காரணமாக தீஸ்தா நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு.
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு.

கரையோரத்தில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் சேற்றில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கிய இப்பகுதி மக்கள் 102 பேரை காணவில்லை. இதில் 22 ராணுவ வீரர்களும் அடங்குவர். மேலும் 26 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராளமானோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 

வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும், எல்லை சாலை அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையில், சிக்கிம் அரசு உதவிக்கு ஹெல்ப்லைன் எண்களையும் வெளியிட்டுள்ளது.

சிக்கிம் வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "சிக்கிமில் நிகழ்ந்துள்ள இந்த துரதிருஷ்டமவசமான இயற்கைச் சீற்றம் குறித்து முதல்வர் பிரேம் சிங் தமாங்கிடம் கேட்டறிந்தேன். தற்போதைய சவாலை எதிர்கொள்ள மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதியளித்தேன்." என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.