Zinc Rich Foods : சிங்க் நிறைந்த உணவுகள்; பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்! எதற்கு என்று பாருங்க!
Zinc Rich Food : பெண்கள் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டிய சிங்க் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
சிங்க் சத்து நிறைந்த உணவுகள்
சிங்க் உங்கள் உடலுக்கு தேவையான மினரல் ஆகும். இது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உங்கள் உடல் இயங்குவதற்கு, உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க மற்றும் உடலின் வளர்சிதைக்கு, ஹார்மோன்கள் முறையாக சுரப்பதற்கு மற்றும் செல்களின் வளர்ச்சிக்கு சிங்க் உதவுகிறது.
உங்களுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு சிங்க் உதவுகிறது. நீங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சிங்க் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள். இதையெல்லாம் குறிப்பாக பெண்கள் தங்களின் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நட்ஸ்கள்
முந்திரி, பாதாம் மற்றும் கடலை போன்ற பல்வேறு நட்ஸ்களை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவு சிங்க் சத்து உள்ளது. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்கள் அன்றாட சிங்க் சத்துக்கள் தேவையை பூர்த்தி செய்யும். ஆரோக்கியமான கொழுப்புக்களை வழங்குகிறது. மற்ற தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
பரங்கிக்காய் விதைகள்
பரங்கிக்காய் விதைகளில் உள்ள முக்கியமான ஒரு மினரல் சிங்க் ஆகும். இது பரங்கிக்காயை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக்குகிறது. உங்கள் உடலில் சிங்க் சத்தின் அளவை அதிகரித்துக்கொள்ள, பரங்கிக்காய் விதைகளை உங்கள் சாலட்கள், ஸ்மூத்திகள், யோகர்ட்டில் கலந்து சாப்பிடுங்கள். இதை நீங்கள் ஸ்னாக்காகவும் சாப்பிடலாம்.
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலை நார்ச்சத்துக்கள் நிறைந்தது. இது தாவர புரதம் ஆகும். இதில் சிங்க் சத்துக்களும் நிறைந்துள்ளது. உங்கள் அன்றாட சிங்க் தேவையை இது பூர்த்தி செய்யும். உங்கள் உணவில் சாலட்டாக அல்லது கிரேவியாக என எதுவாக வேண்டுமானாலும் கொண்டடைக்கடலையை சேர்த்துக்கொள்ளலாம்.
பால் பொருட்கள் (பால், யோகர்ட், சீஸ்)
பால், சீஸ் மற்றும் யோகர்ட்டில் கால்சிய சத்துக்கள் மட்டுமல்ல, உங்கள் உடலுக்கு தேவையான சிங்க் சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த பால் பொருட்களில் கொழுப்பு இல்லாத அல்லது குறைவான கொழுப்பு உள்ளவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான கொழுப்பும் கிடைக்கும், உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதும் தடுக்கப்படும்.
சிவப்பு இறைச்சி
ஆட்டு இறைச்சியில், சிங்க் சத்து அதிகம் உள்ளது. அதில் புரதச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் இதை எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலின் சிங்க் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இதை அதிகம் சாப்பிடுவதன் மூலம், அதிகளவு கொழுப்பை எடுக்காமால் மிதமான அளவில் சேர்த்து கொழுப்பு உடலில் சேர்வதையும் தவிர்க்க வேண்டும். எனவே சரியான அளவு எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை கொடுக்கும்.
முழுதானியங்கள் (குயினோவா, அரிசி, ஓட்ஸ்)
குயினோவா, சிவப்பரிசி மற்றும் ஓட்ஸ் போன்ற உணவுகளில், சிங்க் அதிகம் உள்ளது. இதனுடன் முக்கிய ஊட்டச்சத்துக்களான நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உணவில் பல்வேறு தானியங்கள் சேர்வதை உறுதி செய்வதுடன், நீங்கள் சிங்க் உட்கொள்ளும் அளவையும் அதிகரிக்கிறது.
முட்டை
முட்டையில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உங்கள் உடலுக்கு தேவையான சிங்க் சத்தும் உள்ளது. எனவே இதையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதை உறுதிப்படுத்துடன், உங்கள் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பருப்பு வகைகள்
தாவர அடிப்படையிலான சிங்க் சத்துக்கள் நிறைந்து. பெண்களுக்கு மிகவும் சிறப்பாக தேர்வு. குறிப்பாக சைவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்பவர்களுக்கு இது மிகவும் நல்லது. இதில் சிங்க், நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது பல்வேறு உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது சாலட்கள், சூப்களிலும் பயன்படுத்தலாம். அசைவ உணவுகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.
சூரியகாந்தி விதைகள்
சூரிய காந்தி விதைகள் மொறுமொறுவென இருப்பதுடன், சுவையானதும் கூட, அதில் சிங்க் சத்தும் நிறைந்துள்ளது. சூரியகாந்தி விதைகளை சாலட்களில் தூவியும், யோகட் மற்றும் ஓட்ஸ் உணவுகளில் தூவியும் சாப்பிடலாம். எனவே இவற்றை தனியாக ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். இதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான சிங்க் சத்துக்களும் கிடைக்கும். ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவை நிறைந்த இந்த ஸ்னாக்ஸ் உடன் உங்கள் சிங்க் அளவையும் அதிகரித்துக்கொள்ளுங்கள்.
சிறுதானியங்கள்
இவற்றில் ஊட்டச்சத்துக்களும், சிங்க் சத்தும் உள்ளது. கம்பு, கேழ்வரகு, குதிரைவாலியில் அதிகளவில சிங்க் சத்து உள்ளது. அரிசி, கோதுமையை விட அதில் அதிகம் உள்ள சத்துக்கள்தான் இவற்றின் தனித்தன்மை, எனவே சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கத்தான் சிறுதானிய ஆண்டாக கடந்தாண்டை ஐ.நா. சபை அறிவித்தது. எனவே அனைவரும், குறிப்பாக பெண்கள் உங்கள் உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொண்டு, உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்