Zinc Deficiency : உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்ன ஆகிறது பாருங்க! கவனம் கட்டாயம் தேவை!
Zinc Deficiency : உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்ன ஆகிறது பாருங்கள். மக்கள் பெரும்பாலும் தங்கள் உடலில் சிங்க் சத்து குறைபாட்டால் ஏற்படும் இந்த பிரச்னைகள் குறித்து கவனிக்க மாட்டார்கள்.

நாளொன்றுக்கு நமது உடலுக்கு 8 முதல் 10 மில்லி கிராம் வரை சிங்க் சத்துக்கள் தேவைப்படும்
நமது உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சிங்க் சத்துக்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது குறைவதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது பாருங்கள்.
அடிக்கடி தொற்றுகள்
உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால், அது உங்களுக்கு அடிக்கடி தொற்றுக்களை ஏற்படுத்தும். இதனால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு செல்கள் திறம்பட செயல்பட சிங்க் சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது குறைந்தால், உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராட சிரமப்படும்.
காயங்கள் ஆறுவதில் தாமதம்
உங்கள் உடலுக்கு சிங்க் சத்துக்கள் மிகவும் அவசியமானது. அவைதான் உடலில் செல்களின் பகுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் உருவாக முக்கிய காரணமாக உள்ளது. இவைதான் காயங்களை விரைந்து குணமாக்கும் தன்மை கொண்டது. இந்த சத்து குறைவது, காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கவைக்கும். காயங்களால் தொற்றுகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.