உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!

உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!

Priyadarshini R HT Tamil
Oct 21, 2024 07:00 AM IST

உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக எடையை இழக்க உதவக்கூடிய இந்த நட்ஸ்களை தினமும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!
உடல் எடை குறைப்பு பயணத்தின் உற்ற தோழர்கள் யார் தெரியுமா? ஆரோக்கியமாக இழக்க உதவும்!

உடல் எடை குறைப்பு பயணம்

நட்ஸ்கள் சுவை மிகுந்தவை மட்டுமல்ல உங்கள் எடை குறைப்பு பயணத்துக்கு உதவக்கூடியவை. நட்ஸ்களில் போதிய சத்துக்களும், உடலுக்கு தேவையான கொழுப்புகளும் உள்ளன. நட்ஸ்களால் உங்கள் விரைவான எடை இழப்புக்கு உதவ முடியும்.

நட்ஸ்கள்

பாதாம் – புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. பாதாம் சாப்பிடுவது உங்களுக்கு வயிறு நிறைந்ததுபோன்ற உணர்வை கொடுக்கும். அதனால், உங்களுக்கு அடிக்கடி சாப்பிடும் எண்ணத்தை ஏற்படுத்தாது. மேலும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

வால்நட்ஸ் – வால்நட்டில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ளது. மேலும் தேவையான சத்துக்களும் உள்ளது. கொழுப்பை எரிக்கும் சக்தியை உருவாக்குகிறது. வீக்கத்தை தடுக்கிறது. இவையும் பசியை கட்டுப்படுத்தி சத்தில்லா உணவு சாப்பிடுவதை தடுத்து வைக்கிறது.

பிஸ்தா – இதில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது. உடல் எடை குறைப்பு சிறந்த ஸ்னாக்ஸாக உள்ளது. ஆனால், அதிக பிஸ்தாக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பிரேசில் நட்ஸ் – பிரேசில் நட்ஸி, நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் செலினியம் உள்ளது. அது உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து உங்களை தைராய்டில் இருந்து காக்கிறது.

முந்திரி – மற்ற நட்ஸ்களை விட நமது கிச்சனில் அதிகம் நிறைந்திருப்பது. இதில் மெக்னீசிய சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. அது உங்களுக்கு பசி உணர்வை கட்டுப்படுத்தி வைத்து உங்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது. உங்கள் எடை குறைப்பு பயணத்தில் சிறந்த உணவாக இந்த நட்ஸ்கள் உள்ளன.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.