பத்து நிமிஷத்துல பட்டுன்னு ரெடி பண்ணிடலாம்; சூப்பர் சுவையில் மழைக்கு இதமான பூண்டு குழம்பு! 2 வாரங்கள் கெடாது!
பத்து நிமிஷத்துல பட்டுன்னு ரெடி பண்ணிடலாம், சூப்பர் சுவையான மழைக்கு இதமான பூண்டு குழம்பு. இதை செய்து வைத்துக்கொண்டால் 2 வாரங்கள் கெடாது. இதை ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு உங்கள் சமையலை எளிதாக முடித்துவிடலாம்.
சூப்பர் சுவையான பூண்டு குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு முக்கியமான உட்பொருட்களாக பூண்டு மற்றும் புளித்தண்ணீர் உள்ளது. நீங்கள் குழம்பு அல்லது சாம்பார் வைக்கப் பயன்படுத்தும் எந்த குழம்பு மிளகாய்ப் பொடியை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இதை செய்வதற்கு சில நிமிடங்களே போதும். இதை ஃபிரிட்டிஜில் வைத்து இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். இதற்கு தொட்டுக்கொள்ளவும் உங்களுக்கு பெரிதாக ஒன்றும் தேவையில்லை. அப்பளமே போதுமானது. இதை செய்வதும் எளிது. நீங்கள் இதை வைத்து ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்துவிடுங்கள். மழைக்காலத்துக்கு இந்த பூண்டு குழம்பு மிகவும் இதமாக இருக்கும். அதுமட்டுமின்றி பூண்டு எண்ணற்ற நற்குணங்களும் நிறைந்தது. இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் தருகிறது.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
தாளிப்பு வடகம் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு பல் – 25
இந்துப்பு – தேவையான அளவு
குழம்பு மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
புளித்தண்ணீர் – கால் கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், தாளிப்பு வடகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து இந்துப்பு, குழம்பு மிளகாய்த்தூள், புளித்தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். மூடிவைத்து எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கினால் சூப்பர் சுவையான பூண்டு குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து, அப்பளம் அல்லது முட்டைகோஸ் பொரியலுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் இரண்டு வாரங்கள் வரை கெடாது. இதை தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். இதை உங்களுக்கு தேவையான அளவு அதிகமாகக் கூட செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம்.
பூண்டின் நன்மைகள்
பூண்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் நறுமணத்துக்கு அலிசின் என்ற உட்பொருள் காரணமாகும். இதுதான் பூண்டை உங்களுக்கு ஏற்ற உணவாக மாற்றுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பூண்டு உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், அது உங்களுக்கு குடல் புற்றுநோய் எற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
வீக்கத்துக்கு எதிராக செயல்படுகிறது
பூண்டு எண்ணெய் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. உங்களுக்கு மூட்டு மற்றும் தசைகளில் வலிகள் ஏற்பட்டால் பூண்டு எண்ணெயை தடவலாம். இது ஆர்த்ரிட்டிஸ் நோயால் ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் தமனிகளில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்த சிவப்பணுக்கள், பூண்டில் உள்ள சல்பஃரை ஹைட்ரோஜென் சல்ஃபைட் வாயுவாக மாற்றுகிறது. இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது.
சருமத்துக்கு பொலிவைத் தருகிறது
பூண்டின் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை தூய்மையாக்குகிறது. முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. முகப்பருக்களில் பூண்டை வைத்து தேய்க்கும்போது அவை அகற்றப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் பூண்டு உங்கள் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால், அதை சருமத்தில் தேய்க்கும்போது கவனம் தேவை. எனவே இதை செய்யும் முன் உங்கள் சரும நோய்கள் நிபுணரை அணுகுவது சிறந்தது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்