தேங்காய்ப்பாலில் சர்பத் செய்ய முடியும்; எப்படி என்று பாருங்கள்! சுவையிலும் அசத்தும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தேங்காய்ப்பாலில் சர்பத் செய்ய முடியும்; எப்படி என்று பாருங்கள்! சுவையிலும் அசத்தும்!

தேங்காய்ப்பாலில் சர்பத் செய்ய முடியும்; எப்படி என்று பாருங்கள்! சுவையிலும் அசத்தும்!

Priyadarshini R HT Tamil
Dec 28, 2024 02:22 PM IST

தேங்காய்ப்பால் சர்பத் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேங்காய்ப்பாலில் சர்பத் செய்ய முடியும்; எப்படி என்று பாருங்கள்! சுவையிலும் அசத்தும்!
தேங்காய்ப்பாலில் சர்பத் செய்ய முடியும்; எப்படி என்று பாருங்கள்! சுவையிலும் அசத்தும்!

பாதாம் – 5 (ஊறவைத்து தோலை உறித்தது)

முந்திரி – 5 (ஊறவைத்தது)

மில்க் மெய்ட் – ஒரு ஸ்பூன்

பாதாம் பிசின் – ஒன்றரை ஸ்பூன் (ஊறவைத்தது, முதல் நாள் இரவிலே ஊறவைத்துவிடவேண்டும்)

சப்ஜா விதை – ஒரு ஸ்பூன் (ஊறவைத்தது, சர்பத் தயாரிப்பதற்கு அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

நாட்டுச்சர்க்கரை – ஒரு ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி – ஒரு சிட்டிகை

துருவிய முந்திரி – ஒரு ஸ்பூன்

செய்முறை

தேங்காய் துருவலுடன் ஊறவைத்த முந்திரி, பாதாம், மில்க் மெய்ட் சேர்த்து, மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து பால் பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு டம்ளரில் ஊறவைத்த பாதாம் பிசின், சப்ஜா விதைகளை சேர்க்கவேண்டும். அடுத்து நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி, அரைத்த தேங்காய்ப்பால் என அனைத்தையும் சேர்த்து ஒரு ஸ்பூனில் நன்றாக கலந்துவிடவேண்டும். முந்திரிப்பொடியை தூவி பரிமாறினால், சூப்பர் சுவையான தேங்காய்ப்பால் சர்பத் தயார். இதை கோடை காலத்தில் தொடர்ந்து பருகினால், உடலில் உள்ள சூடு குறையும்.

இதில் நாட்டுச்சர்க்கரைக்கு பதில் தேனும் கலந்து பருகலாம். உங்கள் இனிப்பு அளவுக்கு ஏற்ப அதிகரித்து அல்லது குறைத்து பயன்படுத்தவேண்டும். இதில் ஐஸ் கட்டிகள் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் ஐஸ் கட்டி வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதை தவிர்த்து விடலாம்.

கோடை காலத்தில் இதை கட்டாயம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 4 நாட்களாவது சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வைரை அனைவரும் விரும்பி பருகுவார்கள்.

தேங்காய்ப்பால்

தேங்காய்ப்பால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். அதை நீங்கள் பழங்களுடன் சேர்த்து சாறு எடுத்தும் பருகலாம். பழங்களில் பால் கலந்து பருகுவதற்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து பழச்சாறுகளை பருகிப்பழகலாம். தேங்காய்ப்பாலில் பொதுவாக சாதம் செய்ய முடியும். அதன் சுவை பிரியாணிக்கே டஃப் கொடுக்கும். அசத்தல் சுவையில் தேங்காய்ப்பால் புலாவ் செய்வது எப்படி என்று பாருங்கள். இது பிரியாணி சுவையிலேயே இருந்தாலும், பிரியாணி செய்யும் முறையில் இருந்து கொஞ்சம் மாறுபடும். இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா மட்டுமே கூடபோதுமானதுதான். தேங்காய்ப்பால் உங்களுக்கு கொடுக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். தேங்காய்ப்பால் சாதத்தை செய்வதற்கும் கற்றுக்கொள்ளுங்கள்.

தேங்காய்ப்பாலின் நன்மைகள்

தேங்காய்ப்பாலில் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. இது லாக்டோஸ் இல்லாததது. தாவர அடிப்படையிலானது. நுண்ணுயிர்களுக்கு எதிரான மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அல்சரை குணப்படுத்துகிறது.

ஒரு கப் தேங்காய்ப்பாலில் 169 கலோரிகள் உள்ளது. 1.1 கிராம் புரதம் உள்ளது. 16.9 கிராம் கொழுப்பு, 14.6 கிராம் சாச்சுரேடட் கொழுப்பு, 3.3 கிராம் கார்போஹைட்ரேட், 2.0 கிராம் சர்க்கரை உள்ளது.

தேங்காய்ப்பாலில் கொழுப்பு, சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. தேங்காய்ப்பால் கொழுப்பு நீக்கப்பட்டும் கிடைக்கிறது. தேங்காய்ப்பால் உங்கள் உணவுக்கு கிரீமி டெக்ச்ரைக் கொடுக்கும்.

தேங்காய்ப்பாலில் அலர்ஜி ஏற்படுத்தும் குணங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் இது யாருக்காவது அலர்ஜியை ஏற்படுத்தினால் அவர்கள் தவிர்ப்பதே நல்லது. எனினும் தேங்காய்ப்பாலை மிதமான அளவுதான் பயன்படுத்த வேண்டும். அதிகளவு உபயோகித்தால் வயிறு உபாதைகளை ஏற்படுத்தும். தேங்காய்ப்பாலை பயன்படுத்தும்போதும் அதில் தண்ணீர் அதிகம் கலந்து நீர்த்துப்போகச் செய்துதான் உபயோகிக்கவேண்டும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.