உங்கள் கிச்சன் தோட்டத்திலே ஸ்பிரிங் ஆனியன் வளர்க்கலாம்; மண் தேவையில்லை; தண்ணீர் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் கிச்சன் தோட்டத்திலே ஸ்பிரிங் ஆனியன் வளர்க்கலாம்; மண் தேவையில்லை; தண்ணீர் போதும்!

உங்கள் கிச்சன் தோட்டத்திலே ஸ்பிரிங் ஆனியன் வளர்க்கலாம்; மண் தேவையில்லை; தண்ணீர் போதும்!

Priyadarshini R HT Tamil
Dec 28, 2024 07:00 AM IST

வீட்டிலே எளிதாக ஸிபிரிங் ஆனியன் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.

உங்கள் கிச்சன் தோட்டத்திலே ஸ்பிரிங் ஆனியன் வளர்க்கலாம்; மண் தேவையில்லை; தண்ணீர் போதும்!
உங்கள் கிச்சன் தோட்டத்திலே ஸ்பிரிங் ஆனியன் வளர்க்கலாம்; மண் தேவையில்லை; தண்ணீர் போதும்!

ஸ்பிரிங் ஆனியன்கள் வாங்குங்கள்

உங்கள் வீட்டில் ஸ்பிரிங் ஆனியன் செடிகளை வளர்க்கவேண்டும் என்றால், அதற்கு முதலில் நீங்கள், மார்க்கெட்டில் இருந்து ஃபிரஷ்ஷான ஸ்பிரிங் ஆனியனை வாங்கிக்கொள்ளவேண்டும். அதில் வெள்ளையான ஆரோக்கியமான விதைகள் உள்ளதா என்பதை பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் வாங்கும்போது, அது ஃபிரஷ்ஷாகவும், மொறுமொறுப்புடனும் இருக்கவேண்டும்.

தண்டுகளை வெட்டவேண்டும்

இப்போது நீங்கள் தண்டுகளின் மேல் வளர்ந்துள்ள பகுதியை வெட்டவேண்டும். ஸிபிரிங் ஆனியன்களின் நுனியில் வெட்டினால் போதும். வேருடன் மூன்று இன்ட் வெள்ளையான பகுதியையும் விட்டுவிடவேண்டும்.

ஜார் எடுத்துக்கொள்ளுங்கள்

ஒரு சிறிய ட்ரான்ஸ்பரண்ட் ஜாரில், நல்ல ஆழமானதாக எடுத்துக்கொண்டு, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, குறிப்பாக அதில் ஆர்ஓ தண்ணீரை ஊற்ற வேண்டும். முன்னரே அந்த ஜாடியை சூடான தண்ணீரில் கழுவவேண்டும். நல்ல நீளமான ஜாராக அந்த ஜார் இருக்கவேண்டும். வெள்ளைத் தண்டு முழுவதையும் வைக்கவேண்டும். அந்த அளவுக்கு ஆழமானதாக இருக்கவேண்டும்.

தண்ணீர் ஊற்றுங்கள்

ஜாடியை சுத்தம் செய்தவுடன், தண்ணீரில் நிரப்புங்கள். ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளை தண்டு மூழ்கும் வரை வைத்துவிடுங்கள். வேர்கள் முழுவதும் மூழ்கியிருக்குமாறு வைக்கவேண்டும். அந்த வெள்ளைப்பகுதி கொஞ்சம் தண்ணீருக்கு வெளியில் தெரியவேண்டும்.

ஜன்னலுக்கு பக்கத்தில் வைக்கவேண்டும்

அந்த ஜாரை, சூரிய ஒளி படும் ஜன்னலுக்கு அருகில் வைக்கவேண்டும். அப்போதுதான் செடிக்கு ஓரிரு மணி நேரங்கள் சூரிய ஒளி கிடைக்கும். ஒரு மணி நேரம் கழித்து, மறைமுக சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வைக்கவேண்டும். அதிகம் சூரிய ஒளி கிடைத்தால், அது இலைகளை சேதப்படுத்தும்.

தண்ணீரை எப்போது மாற்றவேண்டும்?

3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றவேண்டும். சூடான மற்றும் சாதாரண தண்ணீர் கலந்து அந்த தண்ணீரை ஊற்றவேண்டும். சூடான தண்ணீர் வளர்ச்சியைத் தூண்டும். ஒரு சில நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றவேண்டும். இது செடிகள் அடர்ந்து வளராமல் இருக்க உதவும்.

வளர்ச்சியை பார்த்துக்கொள்ளுங்கள்

பசுமையான தண்டுகள் 7 முதல் 10 நாட்களில் முளைக்கத் துவங்கும். அடியில் இருந்து முளைவிட்டு வரவேண்டும். வேரும் நீளமாக வளரும். இந்த நிலையில் இன்னும் ஆழமான கண்டெய்னருக்கு மாற்றவேண்டும்.

அறுவடை எப்போது?

பசுமையான தண்டுகள் 8 இன்ச் வளர்ந்தவுடன், நீங்கள் இலைகளை அறுவடை செய்யலாம். கூரான கத்தரிக்கோலைப் பயன்படுத்தி செடிகளை வெட்டுங்கள். உங்களுக்கு தேவையான அளவு மட்டும் வெட்டுங்கள். அதிகம் வெட்டவேண்டாம்.

உரம் தேவையா?

4 முறை அறுவடையானவுடன், குறைந்தது 2 மாதம் ஆனவுடன், இது உங்களுக்கு உரமிட ஏற்ற தரும். இந்த தருணத்தில் தண்ணீர் உரம் மட்டும் இடவேண்டும். தண்ணீரை மாற்றி தண்ணீர் உரத்தை இடவேண்டும். இது தாவர வளர்ச்சிக்கு உதவும். 4 அறுவடைக்கும் பின்னர் நீங்கள் தண்ணீர் மாற்றும்போது, வேர்களை வெட்டிவிட்டு, கொஞ்சம் நல்ல தண்ணீர், உரமிட்டு வையுங்கள்.

வேரை எப்போது மாற்ற வேண்டும்?

ஸிபிரிங் ஆனியன் தண்டுகள், மேலும் புதிய இலைகளை இடவில்லையென்றால், இருமுறை உரமும் இட்டுவிட்டீர்கள் என்றால், இந்த நேரம் நீங்கள் வேரை மாற்றவேண்டிய தருணம் என்று பொருள். எனவே புதிய ஸ்பிரிங் ஆனியன்களை வாங்கி நட்டுவையுங்கள். இதை மீண்டும், மீண்டும் தேவைப்படும்போது செய்து தொடர் அறுவடைக்கு வழிவகுத்துக்கொள்ளுங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.