Gardening Tips : பால்கனி அல்லது மாடித்தோட்டத்திலே மாதுளை வளர்க்கலாம்! இதோ எப்படி என்று பாருங்கள்!
மாடித்தோட்டத்தில் மாதுளை வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.

நீங்கள் பால்கனி அல்லது மாடித்தோட்டத்திலே மாதுளையை வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழம் மாதுளை ஆகும். ஆனால் அதை தோலை நீக்கி, அதில் உள்ள முத்துக்களை உதிர்த்து சாப்பிடவேண்டும். பழங்களில் ராணி என்றால் அது மாதுளைதான். அதில் அவ்வளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் அதன் விலை எப்போதும் உங்களை வியப்பில் ஆழ்த்தும் தன்மை கொண்டது. சிலர் இந்தப் பழத்தை வீட்டு தோட்டத்திலே வளர்க்க விரும்புவார்கள். இதை வீட்டுத் தோட்டத்தில் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.
வீட்டில் வளர்க்கவேண்டும்?
உங்கள் வீட்டில் மாடித்தோட்டம் இருந்தாலோ அல்லது வீட்டில் தோட்டம் இருந்தாலோ நல்லது. அந்த இடத்தில் நேரடியான சூரிய ஒளி கிடைக்கவேண்டும். மாதுளைக்கு நாள் முழுவதும் நேரடி சூரிய ஒளி இருக்கவேண்டும். எனவே நீங்கள் வீட்டிலேயே மாதுளையை வளர்க்க ஏற்ற வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
விதை அல்லது நாற்றுகள்
வீட்டிலேயே நீங்கள் மாதுளையை வளர்க்கவேண்டுமெனில், அதற்கு நீங்கள் நர்சரி கார்டனில் இருந்து நாற்றுக்களை வாங்கி வந்து நட்டு வைத்து வளர்க்கும் வழிதான் சிறந்தது. விதைகளை இட்டு வளர்ப்பது நல்ல வழி கிடையாது. எனவே ஆரோக்கியமான மாதுளை நாற்றுக்களை நர்சரி கார்டனில் இருந்து வாங்கி வளருங்கள். இது உங்கள் மிக விரைவில் பழங்களைக் கொடுக்கும். நீங்கள் தொட்டியில் நடும்போது ஆழமான மற்றும் அகலமான தொட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.