உங்கள் வீட்டு தோட்டம் அல்லது பால்கனியிலேயே கிவிப்பழங்களை வளர்க்க முடியும்! நோய் எதிர்பை அதிகரிக்கும்!
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கிவி பழங்களை வீட்டிலே வளர்ப்பது எப்படி?

நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும் கிவிப்பழங்களை உங்கள் வீட்டுத்தோட்டம் அல்லது பால்கனி அல்லது மாடித்தோட்டம் என எங்கு வேண்டுமானாலும் எளிதாக வளர்க்க முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். கிவி, புளிப்புச் சுவையும், வைட்டமின் சி சத்துக்களும் அதிகம் நிறைந்த ஒரு பழம் ஆகும். அது மட்டுமின்றி இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்தியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களாக கிவிப்பழம் உள்ளது. கிவிப்பழங்கள், விலையுயர்ந்தவை. இதனால் அதை வாங்குவது என்பதும் கொஞ்சம் சிரமம்தான். எனவே கிவிப்பழங்களை நாம் வீட்டிலே வளர்த்துவிட்டால் நமக்கு தேவையான ஆரோக்கியமும் கிடைக்கும். காசும் மிச்சம். இதை வீட்டிலே வளர்க்க முடியுமா? என்றால், நிச்சயம் முடியும் என்பதுதான் பதில். எனவே கிவிப்பழங்களை வீட்டிலே வளர்க்கும் வழிகளைப் பாருங்கள். வீட்டிலே வளர்த்து ஆரோக்கியம் பெறுங்கள்.
கிவிப்பழத்தை வீட்டில் வளர்ப்பது எப்படி?
கிவிப்பழங்களை வீட்டிலேயே வளர்க்கவேண்டும் என்றால், அதற்கு சுலபமான மற்றும் விலை குறைவான வழியாக அதன் விதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பது உள்ளது. கடையில் இருந்து கிவிப்பழங்களை வாங்கிக்கொள்ளுங்கள். அவை அதிகம் பழுத்ததாக இருக்கக்கூடாது. புதிதாக வந்த பழங்களாக மட்டும் இருக்கவேண்டும். அவற்றை அழுத்தினால் அவை மீண்டும் அந்த ஷேப்புக்கு வந்துவிடவேண்டும். அதுபோன்ற பழங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
விதைகளை வெளியே எடுங்கள்
இப்போது கிவியின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இந்த துண்டுகளை தண்ணீரில் சேருங்கள். நன்றாக இவற்றை பிசைந்தால், சதைகளும், விதைகளும் விரைவில் பிரிந்து வரும். இதை ஒரு சல்லடை வைத்து வடிகட்டுங்கள், விதைகளை தனியாக எடுங்கள். இப்போது உங்களுக்கு விதைகள் கிடைத்துவிடும்.
