Back Pain Yoga: கீழ் முதுகு வலியை சரிசெய்ய உதவும் 8 விதமான யோக ஆசனங்கள் மற்றும் செய்முறைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Back Pain Yoga: கீழ் முதுகு வலியை சரிசெய்ய உதவும் 8 விதமான யோக ஆசனங்கள் மற்றும் செய்முறைகள்!

Back Pain Yoga: கீழ் முதுகு வலியை சரிசெய்ய உதவும் 8 விதமான யோக ஆசனங்கள் மற்றும் செய்முறைகள்!

Marimuthu M HT Tamil
May 28, 2024 10:03 PM IST

Back Pain Yoga: யோக ஆசனங்கள் மூலம் இயற்கையான முறையில் கீழ் முதுகு வலியை சரிசெய்யலாம். விரைவான நிவாரணத்திற்கு இந்த 8 விதமான பயிற்சிகளை முயற்சிக்கலாம்.

Back Pain Yoga: கீழ் முதுகு வலியை சரிசெய்ய உதவும் 8 விதமான ஆசனங்கள் மற்றும் செய்முறைகள்!
Back Pain Yoga: கீழ் முதுகு வலியை சரிசெய்ய உதவும் 8 விதமான ஆசனங்கள் மற்றும் செய்முறைகள்! (Photo by Amauri Mejía on Unsplash)

யோகாவின் சிறப்புகள்:

இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அக்ஷர் யோகா கேந்திராவின் நிறுவனர் ஹிமாலயன் சித்தா அக்ஷர் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், “யோகா சரியான தோரணையை ஊக்குவிக்கிறது. முதுகில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது. யோகாவில் உள்ள சுவாசப் பயிற்சிகள் தசைகளுக்கு ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்தி, தளர்வு மற்றும் பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது. 

இந்த நடைமுறை உடல் விழிப்புணர்வை வளர்க்கிறது. முதுகு வலிக்கு பங்களிக்கும் பழக்கவழக்கங்களை அடையாளம் காணவும் சரிசெய்யவும் தனிநபர்களுக்கு உதவுகிறது.

வழக்கமான யோகா ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது அடிக்கடி ஏற்படும் முதுகுவலியைக் குறைக்கிறது. அதே வேளையில், யோகாவை ஒரு வழக்கமான முறையில் இணைத்துக்கொள்வது, காலப்போக்கில் ஆரோக்கியமான, வலியற்ற முதுகுக்கு உதவிகரமாக இருக்கும். குறைந்த முதுகுவலியைப் போக்கவும், நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஆசனங்களை யோகா வழங்குகிறது’’எனக் கூறினார். 

முதுகு வலியைக் குறைக்கும் ஆசனங்கள்:

கீழ் முதுகு வலியைக் குறைக்க பின்வரும் யோகா ஆசனங்களைப் பரிந்துரைத்தார், அக்‌ஷர். அவையாவன:-

  1. குழந்தையின் போஸ் (பாலாசனா): கைகள் மற்றும் முழங்கால்களில் தொடங்கவும். பின்னர் கைகளை முன்னோக்கி நீட்டி, உங்கள் குதிகால் மீது உட்காரவும். அப்படியே வயிற்றுப் பகுதியை குதிகால் மீது கொண்டுவந்து, நெற்றியைத் தரையில் தொடவைக்கவும். கைகளை முன்னோக்கி நீட்டி, தரையில் அமுத்தவும். இது கீழ்முதுகில் இருக்கும் பதற்றத்தை விடுவிக்க உதவுகிறது.
  2. பூனை-பசு நீட்சி (மர்ஜரியாசனா):  தண்டால் எடுப்பதுபோல் வந்து, முழங்கால்களைத் தரையில் வைத்துக்கொள்ளவும். பின் வயிற்றுப்பகுதியை மட்டும் தரையில் வைத்துக்கொள்ளாமல் கைகளை தரையில் ஊன்றியபடி, பூனை போல் நிற்கவும். அப்போது தலையை முன்பும் பின்பும் அசைக்கவும். இந்த இயக்கம் முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் கீழ் முதுகு அசௌகரியத்தை விடுவிக்கிறது.
  3. கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் (அதோ முக ஸ்வனாசனா): சூரிய நமஸ்காரத்தின் முதல் ஸ்டெப்பில் இருப்பதுபோல் நிமிர்ந்து நின்று இடுப்பை வளைத்து, குனிந்து, உடம்பினை V- வடிவத்தில் உருவாக்கவும்.  முழு முதுகையும் பலப்படுத்துகிறது மற்றும் தொடை எலும்புகளை நீட்டுகிறது.
  4. கோப்ரா போஸ் (புஜங்காசனம்): உங்கள் வயிற்றை தரையில் அமிழ்த்தி படுத்துக்கொள்ளவும். கைகளையும் உடம்பை ஒட்டி வைத்துக்கொள்ளவும். தோள்களுக்குக் கீழே கைகளை ஊன்றி, இடுப்பை தரையில் வைத்து, உங்கள் மார்பையும் தலையினையும் தூக்கவும். இந்த ஆசனம், கீழ் முதுகு தசைகளை பலப்படுத்துகிறது மற்றும் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது.
  5. பாலம் போஸ் (சேது பந்தசனா): முதலில், மேற்கூரையைப் பார்த்து படுத்துக்கொள்ளவும். உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் இடுப்பை கூரையை நோக்கி உயர்த்தவும். தலை மற்றும் காலுக்கு இடையில் இடைவெளி இருக்கவேண்டும். இடுப்பினை கையை வைத்து பிடித்துக்கொள்ளவும். கீழ் முதுகு,  மற்றும் தொடை எலும்புகளை பலப்படுத்துகிறது.
  6. உட்கார்ந்த முன்னோக்கி வளைவு (பச்சி முத்தாசனம்): கால்களை நீட்டி உட்கார்ந்து, இடுப்பினை வளைத்து உங்கள் கை விரல்களை, கால் விரல்களை நோக்கிக் கொண்டு செல்லவும். இது கீழ் முதுகு மற்றும் தொடை எலும்புகளில் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது.
  7. முழங்கால் முதல் மார்பு வரையிலான போஸ் (அபனாசனா): முதலில் ரிலாக்ஸாக வானத்தைப் பார்த்து படுத்துக்கொள்ளவும். முழங்கால்களை மார்புக்குக் கொண்டு வந்து, அவற்றை உங்கள் கைகளால் கட்டிப்பிடிக்கவும். மெதுவாக தளர்த்தவும். கீழ் முதுகினை நீட்டி, அசௌகரியத்தில் இருந்து தப்பலாம்.
  8. நின்ற நிலையில் முன்னோக்கி வளைவு (பாதஹஸ்தாசனம்): நேராக நிமிர்ந்து நின்று,முதுகு தலையை தரையை நோக்கி கொண்டுவரவும். பெருவிரல்களைப் பிடிக்கவும். முழு முதுகு, தொடை எலும்புகள் மற்றும் கீழ் முதுகு வலியைக் குறைக்கிறது.

ஹிமாலயன் சித்தா அக்ஷர் கூறுகையில், “இந்த யோகா ஆசனங்களின் வழக்கமான பயிற்சி, நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துவதன் மூலமும், முக்கிய தசைகளை வலுப்படுத்துவதன் மூலமும், ஒட்டுமொத்த முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் குறைந்த முதுகுவலியைப் பெறலாம். இருப்பினும், இந்த போஸ்களை கவனத்துடன் அணுகுவது அவசியம். அதிகப்படியான உடல் உழைப்பைத் தவிர்ப்பது மற்றும் ஏற்கனவே உள்ள உடல்நலக் கவலைகள் இருந்தால் ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது அவசியம்’’ என தெரிவித்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.