தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Yellow Teeth Remedy : பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை! முகத்தின் புன்னகையே போய்விட்டதா? இதோ வீட்டிலே எளிய தீர்வு!

Yellow Teeth Remedy : பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை! முகத்தின் புன்னகையே போய்விட்டதா? இதோ வீட்டிலே எளிய தீர்வு!

Priyadarshini R HT Tamil
Jul 05, 2024 12:40 PM IST

Yellow Teeth Remedy : பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? முகத்தின் புன்னகையே போய்விட்டதா? இதோ வீட்டிலே எளிய தீர்வின் மூலம் அதை செய்யலாம்.

Yellow Teeth  Remedy : பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை! முகத்தின் புன்னகையே போய்விட்டதா? இதோ வீட்டிலே எளிய தீர்வு!
Yellow Teeth Remedy : பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை! முகத்தின் புன்னகையே போய்விட்டதா? இதோ வீட்டிலே எளிய தீர்வு!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

மஞ்சள் நிற பற்கள்

மஞ்சள் நிற பற்களை வைத்துக்கொண்டு சிரிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், பற்கள் மஞ்சளாவதற்கான காரணங்களை கண்டுபிடித்து அதை தவிர்ப்பதுடன், மஞ்சள் பற்களை போக்கும் வழிமுறைகளை பின்பற்றினாலே உங்கள் பற்கள் வெண்மையாகிவிடும். 

பற்கள் முழு வெண்மையானவை அல்ல, அவை சிறிது மஞ்சள் நிறமும் கலந்ததுதான். அவற்றை மேலும் வெள்ளையாக்குவது சில குறிப்பிட்ட காரணிகள்தான்.

பற்களில் மஞ்சள் கறை படிவது ஏன்?

பற்களை அதன் வெளிப்புற எனாமல்கள்தான் காக்கின்றன. நமது பற்களில் மைக்ரோஸ்கோபிக் துளைகள் இருக்கும். அவற்றில் சிக்கிக்கொள்ளும் நிறமிகள்தான் பிற்காலத்தில் பற்களை மஞ்சள் நிறமாக்குகின்றன. 

இதனால் பற்கள் மஞ்சள் அல்லது பிரவுன் நிறத்திற்கு மாறி முற்றிலும் பொழிவிழந்ததாக பற்களை மாற்றுகிறது. இது வயதாக ஆக அதிகரித்து உங்கள் பற்களின் நிலையை மேலும் மோசமடையச் செய்கிறது.

பற்களின் நிறமாற்றத்திற்காக காரணங்கள்

பற்களை முறையாக பராமரிக்காதது.

வண்ண உணவுகள் மற்றும் பானங்கள் பருகுவது.

புகைபிடித்தல்.

மரபணுக்கள் மற்றும் இயற்கை காரணிகள்.

ஆன்டிபயோடிக்ஸ்.

விபத்துக்கள்.

இவைதான் பற்கள் மஞ்சளாவதற்கு காரணங்கள் ஆகின்றன.

இவற்றை நீங்கள் தவிர்த்தல் பல் நலன் காக்க சிறந்தது. ஒரு நாளில் ஒருமுறை சுடுதண்ணீரால் வாயை கொப்பளிப்பது நல்லது. அதில் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்துக்கொள்வது பல் மற்றும் வாய் பாதுகாப்புக்கு கூடுதல் நலன் கொடுக்கும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பும் உங்களுக்கு பற்களின் கறைகளிப்போக்க உதவும்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழத்தோல் – 1

எலுமிச்சை பழச்சாறு – 4 ஸ்பூன்

உப்புத்தூள் – அரை ஸ்பூன்

டூத் பேஸ்ட் – சிறிதளவு

செய்முறை

வாழைப்பழத்தோலின் இடையில் உள்ள நார்ப்பகுதியை வழித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை நன்றாக மசித்து, அதனுடன், உப்புத்தூள், எலுமிச்சை பழச்சாறு மற்றும் டூத் பேஸ்ட் சேர்த்து நன்றாக குழைத்துக்கொள்ளவேண்டும்.

அதை வைத்து தினமும் உங்கள் பற்களை துலக்கும்போது உங்கள் பற்களில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். இதை நீங்கள் இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் மஞ்சள் கறைகள் முற்றிலும் நீங்கும். இதை அவ்வப்போது தேவைப்படும்போதும் செய்துகொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்