World Youth Day 2024 : உலக இளையோர் தினம் என்றால் என்ன? அதன் வரலாறு மற்றும் கருப்பொருள் என்ன தெரியுமா?
World Youth Day 2024 : உலக இளையோர் தினம் என்றால் என்ன? அதன் வரலாறு மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உலக இளையோர் தினம் அல்லது இளைஞர்கள் தின வரலாறு
சர்வதேச இளைஞர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இளைஞர்கள் இந்த சமூகத்துக்கு வளர்ச்சிக்கு கொடுக்கும் பங்களிப்புகள் குறித்து எடுத்துக்கூறுவதற்காக கொண்டாடப்படுகிறது. அவர்கள் சந்திக்கும் சவால்களை புரிந்துகொள்வது இந்த நாளின் நோக்கம் ஆகும்.
இந்த நாளில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சமூக நிகழ்வுகள் என நடத்தப்படுகின்றன. அவற்றில் சமூக-பொருளாதார மற்றும் சமூக-அரசியல் பிரச்னைகள் என ஒவ்வொரு தேசத்தின் இளைஞரும் சந்திப்பவை குறித்து பேசப்படுகிறது. இந்த நாள் முற்றிலும் இளைஞர்கள் வளர்ச்சி மற்றும் நாட்டுக்கு அவர்கள் தரும் பங்களிப்பில் கவனம்செலுத்துகிறது.
ஐநா சபை, 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படும் என அறிவித்தது. இது ஜநா பொது சபையின் அறிவுரையின்பேரில், 1999ம் ஆண்டு லிஸ்பன் மாநாட்டில் நடந்த இளைஞர்கள் அமைச்சர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. முதல் சர்வதேச இளைஞர்கள் தினம் 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்பட்டது. அது முதல், இந்த நாள் பொதுமக்களுக்கு கற்பிக்க பயன்படுத்தப்படுகிறது.