தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  World Wildlife Day 2024 Do You Know The Theme History And Significance Of World Wildlife Day

World Wildlife Day 2024 : உலக வன உயிர் நாள், கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Mar 03, 2024 06:00 AM IST

World Wildlife Day 2024 : உலக வன உயிர் நாள், கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?

World Wildlife Day 2024 : உலக வன உயிர் நாள், கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?
World Wildlife Day 2024 : உலக வன உயிர் நாள், கருப்பொருள், வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா? (British Council )

ட்ரெண்டிங் செய்திகள்

உலக வன உயிர் தினம், உயிர் பன்முகத்தன்மையை பாதுகாக்க நிலையான பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை ஊக்கப்படுத்த கொண்டாடப்படும் தினம் ஆகும். விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் மேல் அக்கறை கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.

உணவுச்சங்கிலியின் சமநிலையுடன் வைத்திருப்பதில் வன உயிரினங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கிரகத்தின் எண்ணிலடங்கா வேற்றுமைகள், சுற்றுச்சூழல் அமைப்புக்கு உதவுகிறது. அது நாம் உயிர் வாழ உணவும், சுவாசிக்க காற்றையும் கொடுக்கிறது.

கல்வி மற்றும் செயல்பாடுகள் மூலம் உலக வன உயிர்கள் தினத்தை தனி நபர்கள், சமூகங்கள், அரசுகள் மற்றும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஒன்றிணைந்து, இந்த கிரகத்தின் வளமான வன உயிர்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இந்த நாள், உயிர் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், வனஉயிர்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதில் நாம் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்களையும் எடுத்துக்கூறுவதற்கான வாய்ப்பாக அமைகிறது.

2024 கருப்பொருள்

வன உயிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று அந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஒரு சிறப்பு கருப்பொருள் இந்த நாளை கொண்டாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்தாண்டு, இந்த நாளின் கருப்பொருளாக, மக்களையும் இந்த கிரகத்தையும் இணைப்பது – வனவிலங்குகள் பாதுகாப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பதாகும். 

பாதுகாப்பு முயற்சிகளை முன்னேற்றுவதில், தொழில்நுட்பத்திற்கு உள்ள சாத்தியக்கூறுகளை முன்னிலைப்படுத்துவதாகும். இந்த கருப்பொருள் இந்த டிஜிட்டல் காலத்துக்கு ஏற்றதுதாகும். இது வன உயிரனங்கள் பாதுகாப்பில் நீண்ட கால சவால்களை சமாளிக்க உதவும்.

வரலாறு

உலக வன உயிர் தினத்தை 2013ம் ஆண்டு ஐ.நா. பொதுசபையில் தாய்லாந்து நாடுதான் முன்மொழிந்தது. வனவிலங்குகள் மற்றம் தாவரங்களை பாதுகாப்பது குறித்து உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நாளின் நோக்கமாக முன்மொழியப்பட்டது. ஜ.நா. பொதுசபை இந்த தீர்மானத்தை 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. மார்ச் 3ம் தேதியை 2014ம் ஆண்டு முதல் கொண்டாட வலியுறுத்தியது.

வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் மாதிரிகள் மீதான சர்வதேச வர்த்தகம் அவற்றின் உயிர்வாழ்வை அச்சுறுத்துவதில்லை என்பதை உறுதி செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தமான அழிந்துவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாடு (CITES) 1973 இல் இந்த நாளில் கையெழுத்தானது.

முக்கியத்துவம்

உலக வனவிலங்கு நாள், உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முக்கிய நாள். வனவிலங்குகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை அது ஏற்படுத்துகிறது. இது விலங்குகளின் உள்ளார்ந்த மதிப்பையும், இரக்கம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுகிறது.

வனவிலங்குகள், பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் என உயிரினங்களை கொடுமை, சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க இந்த நாள் மக்களைத் தூண்டுகிறது. உலக விலங்குகள் தினம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காக கொண்டது.

நமது கிரகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் காப்பது மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மோதலின்றி, இணைந்து அமைதியான வாழ்வு வாழ்வதை கல்வி, பிரச்சாரம், செயல்பாடுகள் மூலம் வலியுறுத்தவேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்