World Voice Day 2024 : உங்கள் குரலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? உலக குரல் தினத்தில் சில அறிவுரைகள்!
World Voice Day 2024 : உலக குரல் தினத்தில் உங்கள் குரலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உலக குரல் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கு பயன்படும் இந்த அழகான குரலை எப்படி பாதுகாக்க வேண்டும் மற்றும் குரல் தொடர்பான பிரச்னைகளை எப்படி சரிசெய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக குரல் தினம் கொண்டாடப்படுகிறது.
நம்மால் யாருடனும் எளிதில் தொடர்புகொள்ள முடியாது. நம் மனதின் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. நமது குரல்தான் நமது உடலின் ஆரோக்கியம், வயது, பாலினம் மற்றும் உணர்வுகள் என அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.
பெண் குரல்வளைக்கும், ஆண் குரல் வளைக்கும் இருவேறு வித்யாசங்கள் உள்ளது. ஆண் குரல் வளை 95 டிகிரியிலும், பெண் குரல்வளை 115 டிகிரியிலும் இருக்கும். குரல்வளையில் உள்ள தைராய்ட் சுரப்பிகள் மற்றும் குறுத்தெலும்புகளிலும் மாற்றங்கள் நிறைய உள்ளது.
குரல் வளையில் இருந்து குரல் உருவாகிறது. குரல்வளை, வாய்ஸ் பாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு சிக்கலான உறுப்பு. இது குருத்தெலும்புகள், தசைகள், திசுக்கூட்டங்கள், ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளால் ஆனது. இது தைராய்ட் குறுத்தெலும்பில் உள்ளது. அப்பகுதி ஆடம்ஸ் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.
குரலை உருவாக்க நுரையிரலில் இருந்து காற்று தள்ளப்பட்டு, மூடியிருக்கும் குரல் நாண்களை திறந்து அது அதிர்வுகளை ஏற்படுத்துவதில் இருந்து உருவாகிறது. நுரையீரல் கத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
குரல் உருவாவதற்கு சுவாசம் நன்றாக இருக்க வேண்டும். மார்பு தசைகள் மற்றும் நுரையீரலின் உதவியோடு ஒரு குரல் உருவாகிறது. மூக்கு பாதை, வாய் ஆகிய அனைத்தும் உங்கள் குரல் முழுமைபெற உதவுகிறது.
குரல் நாண்களில் எவ்வளவு காற்று அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு, குரலின் சத்தம் அதிகமாகிறது. குரல் நாணின் அளவைப்பொறுத்து, உங்கள் குரலின் சுருதி அமையும்.
உங்கள் குரலை பாதிக்கும் சக்திகள் எவை?
பிறவி குறைபாடு
வீக்கம்
வளர்சிதை கோளாறு
கட்டி
அதிர்ச்சி
வீரியம் குறைவது
நரம்புக்கோளாறுகள்
ஆசிரியர்கள் மற்றும் விற்பனையாளர் அதிகம் தங்களின் குரல்களை பயன்படுத்துபவர்களுக்கு குரல் பிரச்னைகள் ஏற்படும். மற்றவர்களுக்கு பெரியளவில் குரல் பிரச்னைகள் பொதுவாக ஏற்படாது. மேல் சுவாச தொற்றும் உங்கள் குரலை பாதிக்கும்.
ஆனால் அது தொற்று குணமானவுடன், உங்கள் குரலை சரிசெய்துவிடும். ‘உங்கள் குரலை பாதுகாக்க முன்னெச்சரிக்கை தேவை.
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் என்ன செய்து உங்கள் குரலை பாதுகாக்கலாம். இதோ அறிவுரைகள்
நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் பருகி உங்கள் குரல் நாண்களை வறண்டுபோகவிடாமல் ஈரப்பதத்தோடு வைத்திருங்கள்.
உங்கள் குரலுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சரிவிகித அளவில் உட்கொள்ளுங்கள். இது உங்கள் சளி ஏற்படாமல் உங்கள் தொண்டைய ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
மூச்சுப்பயிற்சிகள் செய்து உங்கள் நுரையீரலின் திறனை அதிகரியுங்கள். இது உங்கள் குரல் நாணில் படியும் அழுக்கை குறைக்கும்.
வறண்ட வானிலை நிலவும்போது, ஈரப்பதமூட்டியை பயன்படுத்துங்கள்.
டாபிக்ஸ்