Tamil News  /  Lifestyle  /  World Television Day 2023 Know The History And Importance Of World Television Day

World Television Day 2023 : உலக தொலைக்காட்சி தினம் வரலாறு, முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளலாமா?

Priyadarshini R HT Tamil
Nov 21, 2023 05:15 AM IST

World Television Day 2023 : ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் மூலம் உலக தொலைக்காட்சிகள் தினம் கொண்டாடுவது குறித்து 1996ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முடிவெடுக்கப்பட்டது. இந்த நாள், 1996ம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி உலக தொலைக்காட்சி மன்றம் கூடியதன் நினைவாக இந்த நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

World Television Day 2023 : உலக தொலைக்காட்சி தினம் வரலாறு, முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளலாமா?
World Television Day 2023 : உலக தொலைக்காட்சி தினம் வரலாறு, முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளலாமா?

ட்ரெண்டிங் செய்திகள்

உலக தொலைக்காட்சி தினம், ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகுடன் தொடர்புகொள்வதில் தொலைக்காட்சிகளின் பங்கு குறித்து விளக்குவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலகளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொள்வதற்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் மூலம் உலக தொலைக்காட்சிகள் தினம் கொண்டாடுவது குறித்து 1996ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முடிவெடுக்கப்பட்டது. இந்த நாள், 1996ம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி உலக தொலைக்காட்சி மன்றம் கூடியதன் நினைவாக இந்த நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தொழில்நுட்பம் கடுமையாக வளர்ந்து வருகிறது. கருப்பு வெள்ளை தொலைக்காட்சி முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டியானது. கனமானது முதல் ஸ்லிம்மாகி, ஹெச்டியாகி தட்டை திரை என மாறிவிட்டது.

20ம் நூற்றாண்டில், தொலைக்காட்சி பொது விஷயங்களை கட்டமைப்பதில் ஆதிக்கம் செலுத்தியது. எல்லைகடந்து மக்களை இணைத்தது. அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தியது.

நாம் சந்திப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாத தருணங்களை நமக்கு வழங்கியது. நிலவில் ஒரு செயற்கைளோள் இறங்குவது, ஒரு பணக்கார வீட்டு திருமண நிகழ்வு, உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் என அனைத்தையும் நம்மால் பார்க்க முடிந்தது. வாழ்வில் பல்வேறு இடங்களிலும் இருந்த மக்களை இணைத்தது.

முக்கியத்துவம்

நமது வீட்டின் வரவேற்பறைக்கே உலகை கொண்டு வருவதில் தொலைக்காட்சி பெட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இது தகவல் பரிமாற்றத்தில் பெரும் கருவியாக உள்ளது. பொதுக்கருத்துக்களை கட்டமைக்கிறது. சமூகத்தில் அதன் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொழுதுபோக்கில் தொலைக்காட்சிப்பெட்டி, முக்கிய பங்கு வகிக்கிறது. நாடகங்கள், காமெடிகள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என பல்லாயிரக்கணக்கான நேயர்களை கட்டிப்போடும் திறன் பெற்றதாக தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன. மேலும் நமது அன்றாட பிரச்னைகளில் இருந்து தப்பிக்க தொலைக்காட்சி பெட்டிகள் உதவுகின்றன. வீட்டில் உடனேயே இருப்பதால், நமது மனஉளைச்சலுக்கு மருந்தாகிறது.

உலக தொலைக்காட்சி தினத்தை எப்படி கொண்டாடலாம்?

உங்களுக்கு பிடித்த பழைய நிகழ்ச்சிகளை இப்போது பார்த்து மகிழுங்கள். நீங்கள் தவறவிட்ட நிகழ்ச்சிகளை பார்த்து மகிழுங்கள்.

உங்களுக்கு பிடித்த பழைய நிகழ்ச்சிகள் குறித்து பட்டியலிடுங்கள். அவற்றை மீண்டும் பார்த்து உங்கள் பழைய நினைவுகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

உள்ளூர் தொலைக்காட்சி சேவையை பார்த்து, கடந்த ஆண்டுகளில் இருந்து அவர்கள் எவ்வாறு முன்னேறி வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உலக தொலைக்காட்சி தினம் என்ற ஹேஷ்டேக்குடன் சமூகவலைதளத்தில் பதிவிடுங்கள். உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி தருணங்களை கொண்டாடுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்