World Story Telling Day 2024 : உலக கதை சொல்லல் நாளின் கதை என்னவாக இருக்கும்? தெரிந்துகொள்ளலாமா?
உலக கதைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளுக்கு அல்லது தெரிந்தவர்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு கதையை மறக்காமல் சொல்லிவிடுங்கள்.
கதைகள் கேட்டும், கூறியும் பழக்கப்பட்டவர்கள் நாம். கதைகள் நமது கற்பனை திறனை விரிவுபடுத்தக்கூடியவை. ஒரு கதையை கூறும்போதோ அல்லது கேட்கும்போதோ அந்த கதாபாத்திரங்களுக்கு நாம் ஒரு உருவம் கொடுப்போம் அல்லது அதில் நமக்கு பிடித்த கதாபாத்திரங்களாகவே கேட்பவர் தங்களை கற்பனை செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.
ஒரு கதாசிரியரின் திறமை, ஒரு கதையை படிக்கும்போது, அந்தக்கதையுடனே ஒருவர் ஒன்றிவிடுவதில் இருக்கிறது. ஒரு நல்ல கதை என்றால் நாம் அதை பலருக்கு கூறிக்கொண்டே இருப்போம். அதுவும் அந்த கதாசிரியரின் வெற்றி.
உண்மையில் சினிமாவின் துவக்கம் கதை கூறுவது, பின்னர் நாடகமாகி அது சினிமாகியது. இன்னும் கதை கூறும்விதம் எத்தனை வளர்ச்சியடைந்தாலும் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது கதை. இன்று உலக கதை சொல்லும் தினம்.
உலக கதை சொல்லும் தினம், மார்ச் 20ம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. கதை சொல்வது என்ற கலையை இந்த நாள் கொண்டாடுகிறது. கதையில் வார்த்தைகள், படங்கள், சைகைகள் அல்லது வெளிப்பாடுகள் என எது இருந்தாலும், இந்த நாளில், கதை சொல்லும் அனைத்து வடிவங்களும் இந்த நாளில் பாராட்டப்படுகிறது.
கலை சொல்லல் என்ற கலையை இந்த நாள் அங்கீகரித்து, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இனங்களின் வேற்றுமையை ஊக்குவிக்கிறது. ஒருவருடன் உரையாடுவதற்கான பழைய முறையை எல்லோரும் கட்டாயம் கொண்டாடுங்கள்.
கதை சொல்லும் நாளின் வரலாறு
கதை சொல்லும் முறை மற்றவருடன் தொடர்புகொள்வதற்கான ஒரு முறை. இது இடம் மற்றும் காலத்தை கடந்து தொடர்கிறது. இன்றும் இது இன்றைய காலத்திற்கும் தொடர்புபடுத்த முடிகிறது. கதை சொல்வது எந்த மொழியிலும், எந்த வழியிலும் இருக்கலாம். ஆனாலும் அது புரிந்துகொள்ளக்கூடியதும், தொடர்புடையதும் ஆகும். இது சிந்தனைகள் மற்றும் உணர்வுகளை பாதித்து, கிரியேட்விட்டியையும் தூண்டுகிறது.
கதை சொல்லல் என்பதன் வரலாறு என்று பார்த்தால் அது கற்காலத்திலே துவங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முந்திய குகை ஓவியங்கள், படங்கள் மற்றும் கருத்துக்களில் இருந்துதான் அந்த கால வாழ்வியல் முறை குறித்த தகவல்களை நாம் பெற்றோம். கடந்த கால அறிவை அது நமக்கு கடத்துகிறது.
இது கடந்த காலம் குறித்து நமக்கு கற்பிக்கிறது. ஒவ்வொரு குகைச் சுவரிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்களை மனிதன் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், அது ஒரு கதையை சொல்கிறது. அது கதை சொல்லல் என்ற கலையை வளரச் செய்கிறது.
மக்கள்தொகை வளரவளர மக்கள் தங்களின் எல்லைகளை கடக்க துவங்கினார்கள், அவர்கள் அவர்களின் அனுபவங்களை கதைகளாக எடுத்துச்சென்று ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்துகிறார்கள்.
காலம் செல்லச் செல்ல கதைகள் அதிகரித்தது. ஒவ்வொரு தலைமுறைக்கும் தங்களின் அனுபவங்கள் புதிய கதையானது. பழைய கதைகள் புது வடிவம் பெற்றது. இன்னும் முதியோர்களிடம் சென்றால் பல கதைகளை நமக்கும் கூறுவார்கள். முழுவதும் டெக்னாலஜி மற்றும் கேட்ஜெட்களில் மூழ்கியிருக்கும் நாம், நமது எதிர்கால சந்ததிக்கு என்ன கதை சொல்வோம்?
உண்மை கதைகளைவிட அவற்றில் தகவல்கள் மற்றும் அனுபவங்கள் இருந்தன. பின்னர் மக்கள் கற்பனைகளை உருவாக்கினார்கள். இது கற்பனை உலகம். கதை சொல்லலின் ஒவ்வொரு வகைக்கும், வாழ்வில் குறிப்பிட்ட இடம் இருந்தது. இந்த கலை பல பத்தாண்டுகளுக்கும் மேல் நிலைத்திருந்தது.
கதை சொல்லல் என்ற இந்த நாளில், இந்த நாளை 1991ம் ஆண்டில் கொண்டாட துவங்கிய ஸ்வீடிஸ்க்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அவர் இறந்தாலும், இந்த நாள் வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கிறது. இந்த நாளை கடைபிடித்தவர்களால் இந்த நாள் இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பின்னர் இந்த நாள் உலகம் முழுவதும் பரவியது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மக்கள், உலக கதை சொல்லும் தினத்தை கொண்டாடுகிறார்கள். அதை தங்களுக்கு பிடித்தக் கதைகளை மற்றவர்களுக்கு கூறி, மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு மகிழ்கிறார்கள். இந்த நாளில் கதை சொல்லல் கருத்தரங்கள், நூலகங்கள் மற்றும் பல மகிழ்வான நிகழ்வுகளை முன்னெடுக்கிறார்கள். மொத்தத்தில் இந்த நாள் பல கதைகளால் நிறைகிறது. எங்கே எங்களுக்கும் ஒரு கதை சொல்லுங்கள் பார்க்கலாம்.
டாபிக்ஸ்