World Nutella Day : பார்த்தாலே வாயில் எச்சில் ஊற வைக்கும்! நட்டெல்லாவின் கதை தெரியுமா?
World Nutella Day : பார்த்தாலே வாயில் எச்சில் ஊற வைக்கும்! நட்டெல்லாவின் கதை தெரியுமா?

உலக நட்டெல்லா தின வாழ்த்துக்கள்! ஹசல் நட் ஸ்பிரட் உலகம் முழுவதும் அதன் பிராண்ட் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நட்டெல்லா என்பதாகும். இந்த சுவையான, சாக்லேட் நிறைந்த இந்த ஸ்பிரட்டை பிரட் டோஸ்ட், கேக்குகளுக்கு இடையில் வைத்து பேக் செய்து அல்லது மற்ற பேக்ட் உணவுகளுக்கு இடையில் வைத்து சாப்பிடலாம்.
சிலர் இதை ஸ்பூன் அல்லது விரலில் எடுத்து வெறும் வாயிலே சாப்பிடுவார்கள் அத்தனை சுவை நிறைந்ததுதான் இந்த நட்டெல்லா. பலர் இதை உருளைக்கிழங்கு சிப்ஸ்க்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் நட்டெல்லாவை சாப்பிடுகிறார்கள்.
நட்டெல்லா தின வரலாறு
நட்டெல்லா, ஃபெரேரோ குடும்பத்தில் இருந்து உலகுக்கு இதே பெயரில் 1960ம் ஆண்டு வழங்கப்பட்டது. இதன் வேர்கள் 1800களின் துவக்கத்திலே உள்ளது. நெப்போலியன் ஆட்சிக்காலத்தில் இத்தாலியின் டியூரின் நகரில் சாக்லேட் ஹசல்நட் மிட்டாய் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இனிப்பின் பெயர் கியான்துஜா. அப்போகு கோகோக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இந்த நட் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே சாக்லேட்டின் அளவை அதிகரிக்க அதில் சிறிது ஹசல்நட்கள் சேர்க்கப்பட்டது.
பியாட்ரோ, ஃபெரேரோ குடும்பத்தின் தந்தைக்கு சொந்தமான பேக்கரி இத்தாலியின் ஆல்பாவில் இருந்தது. இந்த நகரம் இதன் ஹசல் நட் உற்பத்திக்காக அறியப்படுகிறது.
இதை முதலில் அப்படியே கட்டியாக விற்றுக்கொண்டிருந்தார்கள். பின்னர் பியாட்ரோவுக்கு இதை கிரீமியாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இது சூப்பர்கிரீமா கியான் துஜா என்று அழைக்கப்பட்டது.
பியாட்ரோவின் மகன் மிசெல், இதை கிரீம் அதாவது குழம்பு வடிவில் தயாரிக்க முடிவெடுத்தார். இதன் தயாரிப்பு முறையை சிறிது மாற்றினார். அதற்கு சூட்டப்பட்ட பெயர்தான் நட்டெல்லா. இதன் முதல் விற்பனை 1964ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது முதல் இது ஐரோப்பா முழுவதிலும் மிகவும் சுவை நிறைந்த பிரபலமான உணவாக உள்ளது.
1980களின் மத்தியில் ஃபெரேரோ குடும்பத்தினர் இதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தனர். இப்போது உலகம் முழுவதிலும் நட்டெல்லா பயன்படுத்தப்படுகிறது.
2007ம் ஆண்டு முதல் உலக நட்டெல்லா தினம் கொண்டாடடப்படுகிறது. இந்த யோசனையை கொண்டுவந்தவர் சாரா ரொஸ்ஸோ, அமெரிக்கள் ப்ளாகர், இவர் அப்போது இத்தாலியில் வசித்து வந்தார்.
எது அவரை உலக நட்டெல்லா தினம் கொண்டாட தூண்டியது? அவருக்கு இது ஏன் பிடித்தது? நட்டெல்லாவை பிடித்தவர்கள் இந்த நாளில் சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதன் மூலம் கொண்டாடுகிறார்கள்.
2015ம் ஆண்டு முதல் இந்த நாள் சாரா ரொஸ்ஸோவிடம் இருந்து நட்டல்லாவை தயாரிக்கும் ஃபெரேரோ நிறுவனத்திற்கு இந்த நாள் கொண்டாட்டம் மாற்றப்பட்டது. இது ஏன் மாற்றம் செய்யப்பட்டது என்றால், நீண்ட நாட்கள் இன்னும் பெரியளவில் இந்த நாள் கொண்டாடப்படவேண்டும் என்பதற்காகத்தான்.
உலக நட்டெல்லா தினத்தை கொண்டாடுவதற்கு பல அழகான கிரியேட்டிவான விஷயங்களை இந்த நிறுவனம் செய்துள்ளது. நட்டெல்லாடே.காம் என்ற வெப்சைட்டில் நீங்கள் கையெழுத்திட்டு, நட்டெல்லா தூதராக ஆகலாம். இதில் நட்டெல்லா தின நிகழ்வுகள் குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்