தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  World Hijab Day 2024 Do You Know Why World Hijab Day Is Celebrated

World Hijab Day 2024 : உலக ஹிஜாப் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Feb 01, 2024 06:00 AM IST

World Hijab Day 2024 : உலக ஹிஜாப் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

World Hijab Day 2024 : உலக ஹிஜாப் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
World Hijab Day 2024 : உலக ஹிஜாப் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

பங்களாதேஷி-நியூயார்க்கை சேர்ந்தவரான நஸ்மா கான் என்பவர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தவர். மத வெளிபாட்டுடன் தனிப்பட்ட சுதந்திரத்தை வளர்ப்பது இந்த நாளின் நோக்கம். அனைத்துதரப்பு பெண்களையும் கலாச்சார புரிதலால் வரவேற்று ஒரு நாள ஹிஜாப் அணிந்து அந்த அனுபவம் எப்படி உள்ளது என்பதை உணர இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

புரிதலுக்கான புதிய வழிகளை திறப்பதன் மூலம் நஸ்மா, முஸ்லீம் பெண்கள் ஏன் ஹிஜாப் அணிவதை விரும்புகிறார்கள் என்ற சர்ச்சைக்கு எதிர்வினையாற்றும் என்று நம்புகிறார்.

நஸ்மா, சமூக போராளி, அமெரிக்காவுக்கு பங்களாதேஷில் இருந்து வந்தவர். இவர் 11 வயதில் இங்கு வந்தபோது அவர் படித்த பள்ளியில் ஹிஜாப் அணிந்த ஒரே பெண்ணாக இருந்தார். அதனால் அவருக்கு கடுமையான அனுபங்கள் ஏற்பட்டதை அவர் நினைவுகூர்கிறார்.

நியூயார்க் நகரில், ப்ரான்க்ஸில் வளர்ந்தவர், ஹிஜாப் அணிந்து வந்ததால் நான் பாகுபாடுகளுக்கு ஆளானேன். நடுநிலைப்பள்ளியில் நான் பேட்மேன் அல்லது நிஞ்ஜா என்ற அழைக்கப்பட்டேன். நான் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தபோது 9/11 தாக்குதல் நடந்தது.

அப்போது நான் ஒசாமா பின்லேடன் அல்லது தீவிரவாதி என்று அழைக்கப்பட்டேன். அது அறுவறுக்கத்தக்க வகையில் இருக்கும். எனவே இந்த பாகுபாடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரே வழியாக நான் கண்டுபிடித்தது, என்னுடன் வாழும் சகோதரிகளை ஹிஜாப் அணிந்துகொள்ள செய்வதுதான் என்று எண்ணினேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டு உலக ஹிஜாப் தினத்தில் ஆண்டுதோறும் 150 நாடுகளைச்சேர்ந்த பெண்கள் பங்கெடுக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலக ஹிஜாப் தினத்திற்கு நிறைய தன்னார்வலர்களும், தூதுவர்களும் உலகளவில் உள்ளனர். அவர்கள் இந்த நாள் குறித்த விழிப்புணர்வையும், ஹிஜாப் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.

இவர் பலதரப்பட்ட நிலைகளில் இருந்தும் வந்தவர்கள். இதில் படித்தவர்கள், அரசியல்வாதிகள், உலகளவில் பிரபலமானவர்கள் என பலரும் இந்நாளுக்கு ஒப்புதல் அளிக்கிறார்கள். உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனங்களும் இந்த நாள் குறித்த செய்திகளை வெளியிடுகின்றன.

இந்த ஹிஜாப் தினம் துவங்கியது முதல் பல்வேறு மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று 2017ம் ஆண்டு முதல் நியயார்க் மாகாணம் இந்த நாளை அங்கீகரித்துள்ளது. அதே ஆண்டு, இந்த நாளை குறிக்கும் வகையில் தி ஹவுஸ் ஆஃப் காமான்ஸ் ஆஃப் தி யுகே நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் முன்னாள் பிரதமர் தெரசா மே கலந்துகொண்டார்.

இப்போது உலக ஹிஜாப் தினம் முன்பெப்போதையும்விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே நாம் ஒன்றிணைந்து, பெண்கள் எப்போது, எங்கு, எதை அணிய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்பதை தெளிவாக கூறவேண்டும். 

உலக ஹிஜாப் தினத்தை நாம் கொண்டாடுவது குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். மத சகிப்புத்தன்மைக்காக அல்ல உலகம் முழுவதும் பெண்களின் உரிமைக்காக இதை செய்யவேண்டும்.

2018ம் ஆண்டு ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தில் மூன்று நாள் கண்காட்சி இந்த நாளை குறிப்பதற்காக நடத்தப்பட்டது. முன்னாள் முதல் ஸ்காட்லாண்ட் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல்வாதிகள் உலக ஹிஜாப் தினத்துக்கு ஆதரவளித்திருந்தார். 

கூடுதலாக பிலிப்பைன்ஸ் ஹவுஸ் ஆஃப் ரெப்ரசன்டேட்டிவ்ஸ் பிலிப்பைன்சில் தேசிய ஹிஜாப் தினமாக பிப்ரவரி 1க்கு ஒப்புதல் அளித்தது.

உலக ஹிஜாப் தின நிறுவனம் ஒரு தன்னார்வ நிறுவனமாக மாறியது. இந்நிறுவனத்தின் நோக்கம் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை விழிப்புணர்வு, கல்வி மற்றும் முன்னேற்றம் மூலம் எடுத்துக்கூறவேண்டும்.

2021ம் ஆண்டு, நஸ்மா கான், சர்வதேச முஸ்லீம் வரலாறு மாதத்தை தோற்றுவித்தார். இஸ்லாமேஃபோபியாவை உலகம் முழுவதும் கலைத்து, உலகம் முழுவதும் வரலாற்றில் முஸ்லீம் பெண்கள் மற்றும் ஆண்களின் பங்களிப்பை கொண்டாடுவது மற்றும் கவுரிவிப்பதன் மூலம் முஸ்லீம் வெறுப்பை தகர்க்க வேண்டும். நியூயார்க் மாகாணம், 2021ம் ஆண்டு மே மாதத்தை முஸ்லீம் வரலாறு மாதமாக ஏற்றுக்கொண்டது.

2022ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி, மெட்டா, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம், 10ம் ஆண்டு உலக ஹிஜாப் தினத்தை கொண்டாட உதவியது. அதே ஆண்டு, நஸ்மா கான், துருக்கியில் 5வது சர்வதேச பெண்கள் மற்றும் நீதி மாநாட்டில் பேச அழைக்கப்பட்டார்.

அங்கு அவர் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதால், அவர்கள் மீது காட்டப்படும் பாகுபாடு குறித்து பேசினார். இந்த மாநாட்டில் துருக்கி பிரதமர் ரிசப் டையிப் எர்டோகன் கலந்துகொண்டார். 2023ம் ஆண்டு நஸ்மா, அமெரிக்காவில், செலவாக்குமிக்க 50 தலைசிறந்த முஸ்லீம்களில் ஒருவராக தேர்தெடுக்கப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்