World Hemophilia Day 2024 : உலக ரத்த உறையாமை நோய் தின வரலாறு, முக்கியத்தும் மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரியுமா?
World Hemophilia Day 2024 : இந்த நாளில் உரையாடல், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நிதி திரட்டுதல், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துதல், அவர்களை புரிந்துகொண்டு ஆதரவளித்தல் ஆகியவற்றை செய்கிறது.
உலக ரத்த உறையாமை நோய் தினம் ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாள் ரத்த உறையாமை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
ரத்தம் கொட்டும் இந்த அரிதான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலிகளை புரிந்துகொள்வதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலக ரத்த உறைதல் தினம் அல்லது ஹீமோஃபிலியா தினம், இந்நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த நாள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவும் கடைபிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்பது இந்த நாளின் நோக்கம்.
ஹீமோஃபிலியாவை புரிந்துகொள்வது
ஹீமோஃபிலியா என்பது அரிதான மரபணு கோளாறு. ரத்தத்தில் உள்ள உறையும் புரதங்கள் குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது. ரத்தம் உறையாமல் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும். சிறு காயம் ஏற்பட்டால் கூட ரத்தம் உறையாது.
இதை சரியான நேரத்தில் கண்டுபிடிக்காவிட்டால் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் சிரமம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கிடைக்க முடியாமல் போய்விடும்.
உலகளவிலான கொண்டாட்டம் மற்றும் நோக்கம்
உலக ஹீமோஃபிலியா தினம், உலகம் முழுவதிலும், ஹீமோஃபிலியாவை கண்டுபிடித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. ரத்தம் வழியும் பிரச்னை உள்ளவர்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் ஊக்குவிக்கிறது. அதன் மூலம் ஒரு ஆதரவான சமுதாயத்தையும், ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பது இதன் நோக்கமாகும்.
கருப்பொருள் 2024
உலக ரத்த உறையாமை நோய் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள், அனைவருக்கும் சமமான மருத்துவம் மற்றும் உதவி; அனைத்து ரத்தம் வழியும் கோளாறுகளையும் அங்கீகரித்தல் என்பதாகும். அதாவது பல்வேறு வகை ரத்த உறைதல் கோளாறு உள்ளவர்கள் அனைவருக்கும் நல்ல சிகிச்சை கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.
வரலாறு
இதன் வரலாறு 10ம் நூற்றாண்டில் துவங்குகிறது. இதுகுறித்த மருத்துவ புரிதல் காலப்போக்கில் ஏற்பட்டது. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளில், முன்னோடி மருத்துவர் ஜான் கான்ராட் ஓட்டோ மற்றும் மருத்துவர் எரிக் வான் வில்லிபிராண்ட் நிறைய விஷயங்களை கண்டுபிடித்தனர். அதில் இந்நோயின் மரபணு தன்மையையும் க்ண்டறிந்தனர். நவீன நோய் கண்டறிதல் மற்றும் அந்நோய் குறித்து அறிவதற்கான அடித்தளமிட்டனர்.
சிகிச்சை
ரத்தம் உறையாமை நோய் குணமடையாது. வழக்கமான ஊசிகள் மூலம், ரத்தம் உறையவைக்கப்பட்டு, ரத்தம் வெளியேறிக்கொண்டே இருப்பது தடுக்கப்படுகிறது. உலக ரத்த உறையாமை தினம், 1989ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதை கண்டுபிடித்த ஃபிராங் ஸ்கீனபெலுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த நாள் உள்ளது. இதன் சிகிச்சைக்கு நிதி திரட்டுதலையும், விழிப்புணர்வு மற்றும் புரிதலுடன் சேர்த்து செய்கிறது.
முக்கியத்துவம்
பொதுமக்களுக்கு ரத்த உறையாமை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, முன்னரே நோயை கண்டுபிடித்து தடுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்வது
நிதி திரட்டுதல், இதுகுறித்த ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல், சிகிச்சைகளை மேம்படுத்துதல், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், இந்நோயாளிகளுக்கு ஆதரவளித்தல், அவர்கள் மீது அனுதாபம் காட்டுதல் ஆகியவை இந்த நாளின் நோக்கமாகும்.
இந்த நாளில் உரையாடல், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நிதி திரட்டுதல், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துதல், அவர்களை புரிந்துகொண்டு ஆதரவளித்தல் ஆகியவற்றை செய்கிறது.
டாபிக்ஸ்