தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  World Elephant Day 2022: Interesting Facts About Elephant

உலக யானைகள் தினம்: யானை குறித்து 8 சுவாரஸ்ய தகவல்கள்!

Aug 12, 2022 01:38 PM IST Karthikeyan S
Aug 12, 2022 01:38 PM , IST

  • உலக யானைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் யானைகள் பற்றிய 8 சுவராஸ்ய தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

உலகில் குறைந்து வரும் யானைகளின் எண்ணிக்கை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாகவும், யானை தந்தங்களை சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் வர்த்தகம் செய்வதை தடுக்கவும், காட்டு யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், வளர்ப்பு யானைகள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

(1 / 8)

உலகில் ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று யானைகள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆசிய யானைகள் இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட 13 நாடுகளில் வசிக்கின்றன. ஆப்பிரிக்க யானைகள் ஜிம்பாப்வே, நமீபியா, போட்ஸ்வோனா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றன.

(2 / 8)

யானைகளின் சராசரி ஆயுட்காலம் சுமார் 70 ஆண்டுகள் ஆகும். 7 அடி முதல் 12 அடிவரை உயரமும் 5 ஆயிரம் கிலோ வரை எடையும் கொண்டவையாகும். யானையின் தும்பிக்கையில் மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட அதிக சதை உள்ளது. இதன் மூலம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மனிதனின் நடமாட்டத்தை கூட அறிய முடியும்.

(3 / 8)

யானையின் இரு தந்தங்களும் 90 கிலோ வரை எடை கொண்டிருக்கும். ஆசிய பெண் யானைகளுக்கு தந்தம் இருக்காது. ஆப்ரிக்கா பெண் யானைகளுக்கு தந்தம் உண்டு. யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது.

(4 / 8)

யானைகள் 18-22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும். ஒரு குட்டி யானை பிறக்கும் போது 80 முதல் 120 கிலோ எடையுள்ளதாக இருக்கும். ஒரு குட்டி யானை பிறந்தாலும் அவை கூட்டமாக வந்து பார்க்கும். ஒரு யானை இறந்துவிட்டாலும் 50, 60 யானைகள் கூட்டமாக வந்து பார்த்து தடவிவிட்டுச் செல்லும். ஒவ்வொன்றுக்கும் இடையில் அவ்வளவு பிணைப்புகள் இருக்கும்.

(5 / 8)

காடுகள் வளமாக இருப்பதற்கும் விதைப் பரவலுக்கும் யானைகள் முக்கிய காரணிகளாக உள்ளன. யானைகள் இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகளை விரும்பி உண்ணும். நாளொன்றுக்கு 200 முதல் 250 கிலோ இலை, தழைகளை சாப்பிடும். 150 முதல் 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது.

(6 / 8)

கடந்த 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்தியா முழுவதும் 29964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2761 யானைகள் உள்ளதாக அந்த கணக்கீடு தெரிவிக்கிறது.

(7 / 8)

யானைகள் அழிந்தால் காடுகள் அழியும். காடுகள் அழிந்தால் மொத்த விலங்கினம், மனிதர்கள் வாழவே முடியாது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யானைகளை பாதுகாக்கவும் இந்த நாள் கொண்டாடப்படுவதற்கான முக்கிய நோக்கம் ஆகும்.

(8 / 8)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்