World Earth Day 2024 : பிளாஸ்டிக் கழிவுகள்; கார்பன் உமிழ்வு; பூமியை அழிக்கும் சக்திகள் அதிகரிப்பு! – அதிர்ச்சி ஆய்வுகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Earth Day 2024 : பிளாஸ்டிக் கழிவுகள்; கார்பன் உமிழ்வு; பூமியை அழிக்கும் சக்திகள் அதிகரிப்பு! – அதிர்ச்சி ஆய்வுகள்!

World Earth Day 2024 : பிளாஸ்டிக் கழிவுகள்; கார்பன் உமிழ்வு; பூமியை அழிக்கும் சக்திகள் அதிகரிப்பு! – அதிர்ச்சி ஆய்வுகள்!

Priyadarshini R HT Tamil
Apr 22, 2024 04:55 AM IST

World Earth day 2024 : ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் முதல் 100 வணிக நிறுவனங்களின் வருமானம் 597 பில்லியன் டாலர் எனக் கணிசமாக உயர்ந்துள்ளது.

World Earth Day 2024 : பிளாஸ்டிக் கழிவுகள்; கார்பன் உமிழ்வு; பூமியை அழிக்கும் சக்திகள் அதிகரிப்பு! – அதிர்ச்சி ஆய்வுகள்!
World Earth Day 2024 : பிளாஸ்டிக் கழிவுகள்; கார்பன் உமிழ்வு; பூமியை அழிக்கும் சக்திகள் அதிகரிப்பு! – அதிர்ச்சி ஆய்வுகள்!

பூமியைக் காக்க ஏறக்குறைய 20 நாட்கள் தற்போது பல்வேறு சுற்றுச்சூழல் தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலைக் காக்க பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானதாக இல்லாததால் பூமி அழிவுப்பாதையை நோக்கி நகரக்கூடும் என்பதே உண்மை.

கடைசியாக வந்த புள்ளிவிவரங்களின்படி, கரியமிலவாயுவின் அளவு 424 ppm ஆக உயர்ந்துள்ளது. (NOAA).

1850ம் ஆண்டிலிருந்து இதுவரை, 2023ம் ஆண்டு, அதிக வெப்பமிகுந்த ஆண்டாக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வெப்ப உயர்வு, பிப்ரவரி 2024 வரை தொடர்ந்துள்ளது தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

இந்தியாவில் வெப்ப உயர்வு காரணமாக, நீர்நிலைகளில் நீரின் இருப்பும், நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது.

ஆர்டிக், அண்டார்டிகா பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இமய மலைகளிலும் தான் இது நடந்துவருகிறது.

இந்த 55வது ஆண்டு உலக பூமி தினத்தின் கருப்பொருள் Planet Vs Plastics பூமியும் பிளாஸ்டிக் பொருளின் பயன்பாடும் என்பதே.

மனிதர்களின் செயற்கையான செயல்பாட்டால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

UNEP ஆய்வறிக்கையின்படி, உலகில் ஒவ்வொரு நிமிடமும், ஒரு மில்லியன் பிளாஸ்டிக் குடுவைகள் விற்பனையாகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் குறுந்துகள்கள் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது.

காற்றின் வாயிலாகவும், நீர் மற்றும் உணவு (உணவுச் சங்கிலி) மூலமாகவும் பிளாஸ்டிக் குறுந்துகள்கள் மனிதர்களை வந்தடைகிறது.

Ocean Conservancy and University of Toronto செய்த ஆய்வில், 88 சதவீத விலங்கு புரதங்கள், மாற்று என்ற பெயரில் உள்ள தாவரப் புரதங்கள், அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பிளாஸ்டிக் குறுந்துகள்கள் நீக்கமற நிறைந்துள்ளது.

University of New Mexico Health Sciences செய்த ஆய்வில், ஆய்வுசெய்யப்பட்ட அனைத்து நஞ்சுக்கொடியிலும் (Placenta) பிளாஸ்டிக் குறுந்துகள்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டதிலிருந்து, பிறக்கும் குழந்தைகளும், கருவுற்ற பெண்களும் கூட அதன் பாதிப்பிலிருந்து தப்பமுடியவில்லை என்பதே உண்மை.

1971ம் ஆண்டு U.தாண்ட், ஐக்கிய நாடுகள் அவையின் இயக்குநராக இருந்தபோது, கொடிய போர்களின் போதாவது, மனித குலம் ஒன்றிணைந்து, போர்களுக்கு எதிராக குரல் எழுப்பி, போர்களைத் தவிர்க்கும் என்ற நம்பிக்கை இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆனால், தற்போது, 2022ம் ஆண்டிலிருந்து, ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர், தற்போது ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை இருந்தும் இப்போர்களை தடுக்க முடியவில்லை.

உக்ரைனின் கணக்குப்படி, ரஷ்யா 8,000 தூரத் தாக்குதல் அழிப்புக் கருவிகளை (Missiles) யும், 4,600 டிரோன் மூலமான அழிவுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

இஸ்ரேல், காசா பகுதி மீது 25,000 டன் வெடிபொருட்களை பயன்படுத்தியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தூரத் தாக்குதல் உற்பத்திக் கருவிகளை (Missiles) உற்பத்தி செய்து, பயன்படுத்தும்போது, கரியமிலவாயு, ஹைட்ரோபுளுரோகார்பன் போன்ற பசுமைக்குடி வாயுக்கள் அதிகம் வெளியாகிறது.

"Conflict and Environment Observatory"ஐச் சேர்ந்த நிபுணர்கள் செய்த ஆய்வில், "உலக மொத்த பசுமைக்குடி வாயுக்கள் வெளியீட்டில், ராணுவ கார்பன் வழித்தடத்தின் பங்கு 5.5 சதவீதம் என கண்டறிந்துள்ளனர்.

உலகின் அனைத்து ராணுவ மையங்களையும், ஒரு நாடாக கருத்தில்கொண்டால், அதன் மூலம் வெளியாகும் கார்பன் வழித்தடத்தின் பங்கு, உலகின் நான்காவது பெரிய கார்பன் உமிழும் மையமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பெர்லினில் நடந்த முதல் COP கூட்டத்திற்கும், கடைசியாக துபாயில் நடந்த COP 28 கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ராணுவச் செலவீனம்,1.2 ட்ரில்லியன் டாலரிலிருந்து, 2.2 ட்ரில்லியன் டாலருக்கு மேலாக உயர்ந்துள்ளது.

ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் முதல் 100 வணிக நிறுவனங்களின் வருமானம் 597 பில்லியன் டாலர் எனக் கணிசமாக உயர்ந்துள்ளது.

உலக பூமி தினம் கொண்டாடப்படும் வேளையில், தற்போதைய கள உண்மைகளை கணக்கில்கொண்டால், பூமிக்கு பேரழிவு என்பது பெரும்பாலும் உறுதியாகிறது.

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்" எனும் கணியன் பூங்குன்றனாரின் கூற்றை மனதில் நிறுத்தி, பூமியை காக்க அனைவரும் மீண்டும் உறுதியேற்க வேண்டும்.

இல்லையேல், பூமி அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.