World day of Social Justice 2024 : உலக சமூக நீதி நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Day Of Social Justice 2024 : உலக சமூக நீதி நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?

World day of Social Justice 2024 : உலக சமூக நீதி நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Published Feb 20, 2024 06:00 AM IST

World day of Social Justice 2024 : உலக சமூக நீதி நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?

World day of Social Justice 2024 : உலக சமூக நீதி நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?
World day of Social Justice 2024 : உலக சமூக நீதி நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரியுமா?

உலக சமூக நீதி நாள், ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இது சமூக நீதியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகிறது. அதை பரப்புவதையும் வலியுறுத்துகிறது. வேலையில்லா திண்டாட்டம், வறுமை, ஒதுக்கி வைப்பது, பாலின வேறுபாடு, மனித உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு ஆண்டும் நாம் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. உலகளவில் நிலவும் சமத்துவமின்மை மற்றும் அதற்கு தேவையான தீர்வுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று குரலற்ற மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தினம்.

நீதியின்மையை வெளிப்படுத்துவது மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள், குழுக்கள் மற்றும் அரசுகள் சமூக நீதியில் எந்தளவுக்கு முன்னேறி வந்துள்ளோம்? எதில் முன்னேற வேண்டும் என்பது குறித்து கணக்கெடுக்க வேண்டும். இதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் என்ன தெரிந்துகொள்வோம்.

வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20ம் தேதி உலக சமூக நீதி நாள் கொண்டாப்படுகிறது. இந்தாண்டு அந்த நாள் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. 2008ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி சர்வதேச தொழிலாளர் ஒருங்கிணைப்பு, நல்ல உலகமயமாக்கலுக்கு சமூக நீதியின் மீது ஐஎல்ஓ ஒப்புதல் ஒன்றை ஒருமனதாக அளித்தது.

1919ம் ஆண்டு ஐஎல்ஓ (சர்வதேச தொழிலாளர் ஒருங்கிணைப்பு) அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது முதல், கொள்கைகள் மற்றும் ஐஎல்ஓ மாநாட்டு தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது முதல் இது மூன்றாவது பெரிய ஒப்புதல்.

முக்கியத்துவம்

ஒவ்வொரு தேசத்தின் முதன்மை இலக்காகவும் சமூக நீதி இருக்க வேண்டும். சர்வதேச கொள்கைகளம் அதன் அடிப்படையில் வகுக்கப்படுகிறது. இதை வலியுறுத்துபவர்கள், சமூக நீதி பொருளாதாரத்துக்கு உதவுகிறது, சமூகங்கள் நன்றாக இயங்கவும் உதவுகிறது.

சமூக நீதியை மையத்தில் வைத்து, நியாயமான உலகமயமாக்கல் மற்றும் நல்ல வேலை, அது வேலைவாய்ப்புகள், சமூக பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் நிறுவனங்கள், அரசுகள் மற்றும் வணிக சங்கங்ளுக்கு இடையில் நேர்மறையான பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

இந்தாண்டு, ஐஎல்ஓ உலகம் முழுவதும் 6 முக்கிய நகரங்களில் நிகழ்ச்சிக்களை ஒருங்கிணைக்கிறது.

தேச, சர்வதேச மற்றும் உள்ளூர் கொள்கைகளில் சமூக நீதியை முன்னுரிமை கொடுப்பது குறித்து உயர் அதிகாரிகள் பேசுவார்கள். கடந்தாண்டு தடைகளை கடப்பது மற்றும் சமூக நீதிக்கான வாசல்களை திறப்பது என்பது உலக சமூக நீதி நாளின் கருப்பொருளாக இருந்தது. இந்தாண்டு அதை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.

கருப்பொருள்

இந்தாண்டில் நாம் ஒருங்கிணைந்து எவ்வாறு பிரச்னைகளை சமாளிப்பது என்பது குறித்து விவாதிப்பதாகவும் இருக்கும். அவை சமமின்மை, போர்கள், பணியாளர்களின் உரிமைகளுக்கு நாம் எப்படி ஒருங்கிணைந்து இருப்பது என்பவை குறித்தும் இந்தாண்டில் உலக சமூக நீதி நாள் விவாதிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.