World Day Against Trafficking in Person : மனித கடத்தல்களில் ஒரு குழந்தை கூட பாதிக்கப்படக்கூடாது! இந்தாண்டு கருப்பொருள்!
World Day Against Trafficking in Person : மனித கடத்தல்களில் ஒரு குழந்தை கூட பாதிக்கப்படக்கூடாது என்பதுதான் இந்தாண்டு மனித கடத்தல்களுக்கு எதிரான உலக தினத்தின் கருப்பொருள்.

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தின் இந்த ஆண்டு பிரச்சாரமாக, குழந்தைகள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. குந்தைகள்தான் உவலகம் முழுவதிலும் கடத்தப்படுபவர்களில் கணிசமான அளவு இடம்பெறுகிறார்கள்.
குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகிறார்கள் . அடுத்ததாக பெண்கள் உள்ளார்கள். பெண்கள் கடத்தப்படுவது பெரும்பாலும் பாலியல் காரணங்களுக்காகத்தான். சில நேரங்களில் தப்பிக்க முயலும் பெண்கள் இறக்கவும் நேரிடுவதுதான் சோகத்திலும் கொடுமையான சோகமாக உள்ளது.
இந்தக்கடத்தலுக்கு சில நேரம் குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ காரணமாகிறார்கள். உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக கடத்தல் உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். கடத்தல் இல்லாத உலக உருவாக்க நாம் பாடுபடுவோம்.
உலகளவில் கடத்தப்படும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் குழந்தை
பெரியவர்களை விட குழந்தைகள், அதிகம் கடத்தப்படுவதோடு அவர்கள் இருமடங்கு வன்முறைக்கும் ஆளாகிறார்கள் என்று ஐநா அறிக்கை கூறுகிறது. வட ஆப்ரிக்கா, சப்சஹாரா ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்பீயர் பகுதிகளில் அதிகம் கடத்தப்படுகிறார்கள். கடத்தப்பட்டவர்களில் குழந்தைகள் 60 சதவீதம் உள்ளனர்.
குழந்தை கடத்தலுக்கான காரணங்கள்
போர், தொற்றுகள், பொருளாதார கடின காலங்கள், சுற்றுச்சூழல் சவால்கள் என இவற்றால், குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுகிறார்கள். ஆன்லைன் ப்ளாட்பார்ம்கள் குழந்தைகள் கடத்தலுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. போதிய பாதுகாப்பின்றி உள்ள வெப்சைட்கள் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
மனித கடத்தல்காரர்கள், ஆன்லைன் ப்ளாட்ஃபார்ம்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பல்வேறு வழிகளில் குழந்தைகளை பாழ்படுத்துகிறார்கள். அவர்களை கொடுக்கும் விஷயங்களை ஆன்லைன் மூலம் வெளியிட்டு அதிக பார்வையாளர்களை சென்றடையச் செய்கிறார்கள்.
குழந்தைகள் பல்வேறு கடத்தல்களுக்கு ஆளாகிறார்கள். அதில் தொழிலாளர்கள் ஆக்கப்படுகிறார்கள் அல்லது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் அல்லது பிச்சை எடுக்கவைக்கப்படுகிறார்கள். சட்ட விரோத தத்தெடுப்பு, செக்ஸ்வல் ரீதியாக பயன்படுத்தப்படுவது என குழந்தைகள் ஆளாகிறார்கள்.
இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வறுமை, அகதிகள் அதிகம் ஆவது, இடம்பெயர்தல், போர், குடும்ப சிதைவுறுவது மற்றும் பெற்றோரின் அக்கறையின்மை ஆகியவை காரணமாகிறது. குறைவான வருவாயுடைய நாடுகளில் குழந்தைகள், குழந்தை தொழில் செய்ய கடத்தப்படுகிறார்கள். வருவாய் அதிகம் உள்ள நாடுகளில் பாலியல் துன்புறுத்தலுக்காக கடத்தப்படுகிறார்கள். இதுதான் பொதுவான ஒன்றாக உள்ளது.
குழந்தைக் கடத்தலை தடுப்பது எப்படி?
பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பது மற்றும் அவர்களை பாதுகாப்பது சவாலாக உள்ளது. ஏனெனில் கடத்தல் குறித்து தெரிவிக்கப்படுவதில்லை, விழிப்புணர்வு குறைவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய ஆதரவு இல்லாததும் காரணமாக உள்ளது. கடத்துபவர்கள், பாதிக்கப்படுபவர்களை மிரட்டுகிறார்கள்.
இதனால் அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போகிறது. இதை தடுக்க சர்வதேச மற்றும் தேச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். குழந்தைகள் பாதுகாப்பை ஒவ்வொரு நாடும் உறுதிப்படுத்தி, குழந்தைகள் கடத்தலை எதிர்க்கவேண்டும். பிரச்னைக்கான காரணங்களான வறுமை, சமத்துவமின்மை போன்ற காரணங்களை களைய நாடுகள் முன்வரவேண்டும். குழந்தைகள் கடத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்தி, இந்த நாளில் கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்