World Day Against Child Labour 2024 : குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தின வரலாறு, முக்கியத்துவம், கருப்பொருள் என்ன?
World Day Against Child Labour 2024 : குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தின வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக உலகளாவிய இயக்கத்தை கொண்டு செல்வது இந்த நாளின் நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகள் சபை, அரசுகளும், மக்களும் சமூக நீதியையும், குழந்தை தொழிலுக்கும் உள்ள தொடர்பை அங்கீகரித்து, அதன் முக்கிய காரணி என்ன என்பதில் கவனம்செலுத்தினால், குழந்தை தொழிலாளர்கள் நிலை ஒழிக்கப்படும்.
குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சூழலில் அவர்கள் வளர்க்கப்படவேண்டும். அவர்கள் எவ்வித பணியிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது.
அவர்கள் உடல் மற்றும் மனம் இரண்டிலும் அவர்கள், எளிதாக பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்களாக இருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மீதான வன்முறை, ஏழை நாடுகளில் எப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தின கருப்பொருள்
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தின், இந்தாண்டு கருப்பொருள், அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள் – குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளியிடுங்கள்.
இந்தாண்டு, குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தின் குழந்தை தொழிலாளர்களின் மோசமான நிலை குறித்து நடந்த மாநாட்டின் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டதன் வெள்ளி விழா ஆண்டு.
குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக நடந்த இரண்டு மாநாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் வேலை செய்வதற்காக குறைந்தபட்ட வயது நிர்ணயத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்த நாள் வாய்ப்பை வழங்குகிறது. அந்த மாநாடுகள் எண் 182 மற்றும் 138 ஆகும்.
கடந்த காலங்களில் குழந்தை தொழிலாளர்களை குறைப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மை காலங்களில் உலகளவில் இந்த நிலை தலைகீழ் மாற்றத்தை கண்டுள்ளது. எனவே குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு முன்னெடுப்புக்களை துரிதப்படுத்தவேண்டும். அதன் முக்கியவத்தை வலியுறுத்த கூட்டு முயற்சி தேவை. அனைத்து வகையிலும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவேண்டும்.
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்
2002ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி, சர்வதேச தொழிலாளர் மையம், முதல் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாளை, அதன் தலைமையகமான ஜெனீவாவில் நடைமுறைப்படுத்தியது. அம்மையம் ஒரு நாளைக்கு முன் உருவாக்கப்பட்டது.
குழந்தை தொழிலாளர்களுக்கான உலக நாள், குழந்தை தொழிலாளர் முறையை நிறுத்தவேண்டம் என்ற முழக்கத்தை உலகளவில் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. 1987ம் ஆண்டு முதல், இந்தியாவில் மத்திய அரசு, குழந்தை தொழிலாளர்கள் குறித்த தேசிய கொள்கையை வகுத்தது.
அது குழந்தைகளின் நலவாழ்விலும், மறுவாழ்விலும் கவனம் செலுத்துகிறது. குறிப்பாக குழந்தை தொழிலாளர்களாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அது முக்கியத்துவம் கொடுக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்தில் உள்ள வறுமை நிலைதான் இந்த குழந்தை தொழிலாளர்கள் ஏற்படுவதற்கான காரணம் என்பதையும் அது கோடிட்டு காட்டுகிறது.
அவர்களின் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதற்காக குழந்தை தொழிலாளர் முறையை தேர்ந்தெடுக்கின்றனர்.
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உல தின பொன்மொழிகள்
ஒவ்வொரு குழந்தையும் ஒரு செய்தியுடன் வருகிறது, அது கடவுள் இன்னும் மனிதனுக்கு ஊக்கமளிக்கவில்லை என்பதாகும் – ரவீந்தரநாத் தாகூர்.
நாம் நமது இன்றைய நாளை தியாகம் செய்வோம், அது நமது குழந்தைகளுக்கு சிறந்தை நாளையை உருவாக்கும் – அப்துல்கலாம்.
பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் தானாக நடக்காது, அது பொது முதலீட்டின் ஒன்றுபட்ட கருத்து மற்றும் விளைவாகும் – நெல்சன் மண்டேலா.
பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையால் சில பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை – மலாலா யூசுப்சாய்.
நீங்கள் குழந்தை தொழிலாளர் முறையை முறைப்படுத்த முடியாது, அடிமைத்தனத்தை முறைப்படுத்த முடியாது. சில விஷயங்கள் தவறுதான் – மைக்கேல் மூர்.

டாபிக்ஸ்