தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Crocodile Day : உலக முதலைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? முதலைகளை காக்க ஏன் முயற்சி செய்யவேண்டும்?

World Crocodile Day : உலக முதலைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? முதலைகளை காக்க ஏன் முயற்சி செய்யவேண்டும்?

Priyadarshini R HT Tamil
Jun 17, 2024 06:00 AM IST

World Crocodile Day : உலக முதலைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? முதலைகளை காக்க ஏன் முயற்சி செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

World Crocodile Day : உலக முதலைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? முதலைகளை காக்க ஏன் முயற்சி செய்யவேண்டும்?
World Crocodile Day : உலக முதலைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? முதலைகளை காக்க ஏன் முயற்சி செய்யவேண்டும்?

ட்ரெண்டிங் செய்திகள்

அளவுகளும், புன்னகையும்

அலிகேட்டர்களின் மூக்குகள் யூ வடிவிலும், க்ராக்டைல்களின் மூக்கு வி வடிவிலும் இருக்கும். அலிகேட்டர்களின் வாய் மூடியிருக்கும். அவற்றின் மேற்புற பற்கள் மட்டும் தெரியும் வகையில் இருக்கும். 

க்ராக்டைல்களின் வாய்ப்புறம் மூடியிருந்தாலும், மேல் மற்றும் கீழ்புறத்தின் பற்கள் தெரியும் வகையில் இருக்கும். மற்றொரு வேறுபாடு, இவையிரண்டும் அளவில் மாறியிருக்கும். க்ராக்டைல்கள் 20 அடி நீளம் இருக்கும். அலிகேட்டர்கள் 13 முதல் 15 அடி மட்டுமே நீளம் இருக்கும்.

அலிகேட்ட்டர்கள் தமிழில் நன்நீர் முதலைகள் என்று அழைக்கப்படுகிறது. அவை நல்ல தண்ணீரில் மட்டும்தான் வசிக்கும். அதாவது உப்பு இல்லாத தண்ணீரில் வாழ்பவை. ஆளால் க்ராக்டைல்கள், நல்ல தண்ணீர் மற்றும் உப்புத்தண்ணீர் என்ற இரண்டு இடத்திலும் வாழும் தன்மை கொண்டவை. ஆனால் உலகிலேயே ஃப்ளோரிடாவில் மட்டும் நன்நீர் முதலைகளும், உப்பு நீர் முதலைகளும் ஒரே இடத்தில் வசிக்கும்.

சூழல் முக்கியத்துவம்

இரு முதலைகளும் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை சமநிலையாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மற்ற உயிரனங்களின் அளவை முறைப்படுத்த உதவுகின்றன. அவற்றின் சாப்பிடும் பழக்கவழக்கத்தில் ஊட்டச்சத்துக்கள் சுழற்சிக்கு உதவுகிறது. இருநீர் முதலைகள், முக்கியமான, தனித்தன்மை வாய்ந்த பங்கு வகிக்கின்றன. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய விலங்குகள் ஆகும். 

ஈரநிலங்களில் துவாரங்களை அமைத்து, வறட்சி காலங்களில் அதில் தண்ணீர் கிடைக்க வழி செய்கின்றன. இதனால், மற்ற நீர்வாழ் உயிரினங்களான மீன்கள், ஆமைகள் மற்றும் மற்ற விலங்குகள் வாழ்வதற்கு வழிவகுக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு தரும் இவற்றை நாம் பாதுகாக்கவேண்டும்.

உப்பு மற்றும் நல்ல தண்ணீர் இரண்டிலும் வாழும் முதலைகள், கலாச்சார அடையாளமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பவையாகவும் உள்ளன. 

ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்துக்கு இவ்விரு விலங்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழ்விடங்கள் அழிவு மற்றும் மாற்றம், மாசு, கால நிலை மாற்றம் மற்றும் திருட்டுத்தனமாக வேட்டையாடுவது போன்ற காரணங்களால், இவையிரண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன.

எனவே உலக முதலைகள் தினம் விழிப்புணர் ஏற்படுத்தவும், இந்த முயற்சிகளுக்கு ஆதரவளித்து, அவற்றின் பாதுகாப்பை வலுவாக உறுதி செய்வதையும் ஊக்குவிக்கிறது. உலக முதலைகள் தினத்தை கொண்டாடும் ஒரு அங்கமாக, இந்த முதலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். 

அவை தொடர்ந்து பெருகவும், இப்பூமியின் நலனுக்காக அவை நலனுடன் இருப்பதற்கும் நாம் உதவவேண்டும். அவற்றின் பாதுகாப்புக்கும் நாம் முன்கனடுப்புகள் மூலம் நாம் உதவவேண்டும். இதுகுறித்து மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

உலக முதலைகள் தினம் குறித்து சமூக வலைதளங்களில் இதுபோன்ற செய்திகளை பரப்பினாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். அந்த வகையிலும் நீங்கள் உலக முதலைகள் தினத்தை கொண்டாடலாம். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.