World Cancer Day: உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் பாதிப்பு.. புற்றுநோய் நாள் வரலாறும், பின்னணியும்
World Cancer Day 2025: உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக புற்றுநோய் இருந்து வருகிறது. அனைத்து வயதினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கொடிய நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமானதாக உள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் பாதிக்ககூடிய நோயாக ஆங்கிலத்தில் கேன்சர் என்று அழைக்கப்படும் புற்றுநோய் இருந்து வருகிறது. சரியான நேரத்தில் சரியான சிகிச்சை முறை மேற்கொள்ள தவறினால் உயிரிழப்பு வரை ஏற்படுத்து அபாயம் மிக்க நோயாக புற்றுநோய் இருக்கிறது.
உயிருக்கு ஆபத்தான இந்த அடையாளம் காண்பது, உரிய சிகிச்சையளிப்பது, நோய் பாதிப்பை தடுப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது
உலக சுகாதார அமைப்பு (WHO) கூற்றுப்படி, உலகளவில் இறப்புக்கு புற்றுநோய் தான் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறப்புகளுக்கு புற்றுநோய் காரணமாக இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், புற்றுநோயின் ஆரம்பகால கண்டறிதல், மேம்பட்ட பரிசோதனை, மேம்பட்ட சிகிச்சை தேர்வுகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வலுவான உலகளாவிய முயற்சிகள் முக்கியத்துவத்தை போன்றவை இந்த நாளில் வலியுறுத்தப்படுகின்றன.