தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  World Cancer Day 2024 How Many People Are At Risk Of Lung Cancer If Someone Smokes Doctors Explanation

World Cancer Day 2024 : ஒருவர் புகைபிடித்தால் எத்தனை பேருக்கு நுரையீரல் புற்றுநோய் ஆபத்து? – மருத்துவர் விளக்கம்!

Priyadarshini R HT Tamil
Feb 04, 2024 08:00 AM IST

World Cancer Day 2024 : ஒருவர் புகைபிடித்தால் எத்தனை பேருக்கு நுரையீரல் புற்றுநோய் ஆபத்து? – மருத்துவர் விளக்கம்!

World Cancer Day 2024 : ஒருவர் புகைபிடித்தால் எத்தனை பேருக்கு நுரையீரல் புற்றுநோய் ஆபத்து? – மருத்துவர் விளக்கம்!
World Cancer Day 2024 : ஒருவர் புகைபிடித்தால் எத்தனை பேருக்கு நுரையீரல் புற்றுநோய் ஆபத்து? – மருத்துவர் விளக்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து சென்னை தரமணி அப்போலோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நுரையீரல் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் காதர் ஹூசேன் ஹெச்டி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறிய தகவல்கள்

 

இதுகுறித்து சென்னை தரமணி அப்போலோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நுரையீரல் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் காதர் ஹூசேன்.
இதுகுறித்து சென்னை தரமணி அப்போலோ புரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நுரையீரல் புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் காதர் ஹூசேன்.

90 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு காற்று மாசு மற்றும் புகை அகியவைதான். புகைபிடிப்பவர்கள் மற்றும் மாசு அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவகளுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. புற்றுநோயுடன் வரும் 10 நோயாளிகளில் 8 பேர் புகைக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள்.

ஒருவர் புகைபிடித்தால் அது அருகில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கிறது. ஒருவர் புகைபிடிக்கும்போது அவரது அருகில் இருப்பவர்களும் புகைபிடிப்பவர்களின் அளவுக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களை செகண்ட் ஹேண்ட் ரிஸ்க் என்று அழைக்கிறோம்.

ஒருவர் புகைபிடிக்கும்போது அதில் உள்ள நச்சுப்பொருட்கள் சுற்றுப்புறத்தில் சூழ்ந்து இருக்கும். சுவர்களில் ஒட்டிக்கொள்ளும், அதன் துகள்களையும் சுவாசிப்பவர்களுக்கும் புற்றுநோய் ஆபத்து ஏற்படுத்துகிறது. இது தர்ட் ஹேண்ட் ரிஸ்க் என்று அழைக்கப்படுகிறது.

நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் முதல் கட்டத்திலேயே தெரியாது. எனவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து நிறைந்தவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

புகை பிடிப்பவர்கள், மாசு அதிகம் நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள், புகை அதிகம் வெளியேறும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட ஆபத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அவ்வப்போது சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

நுரையீரல் புற்றுநோய் உள்ளதை முன்கூட்டியே கண்டுபிடித்தால் போதிய சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆபத்துக்கள் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மரபணு வாயிலாக உள்ளது. எனவே ஆரோக்கியமான வாழ்க்மை முறை மற்றும் உணவுப்பழக்கவழக்கங்களை கடைபிடித்து புற்றுநோய் ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும்.

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் பெரிய அறிகுறிகள் தோன்றாது. கொஞ்சம் முற்றிய நிலையில்தான் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து தெரியவரும்.

அவை

தொடர் இருமல்

இருமும்போது ரத்தம் வருவது

மூச்சுத்திணறல்

நெஞ்சு வலி

திடீர் உடல் எடை குறைவது

பசியின்மை

எலும்பு வலி

தலைவலி

குரல் வளை கட்டிக்கொள்வது

ஆகியவை நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

நுரையீரல் புற்றுநோயை சிடி ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கலாம். கொரோனா காலத்தில் செய்யப்பட்ட ஸ்கேன்களால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நுரையீரல் பிரச்னைகளும் தெரியவந்தன.

சிகிச்சை

இதற்கான சிசிச்சை என்பது நோயாளியின் பாதிப்பு நிலையைப்பொறுத்துதான் உள்ளது. முதல் 3 நிலைகளில் வரும் நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை வரை செய்து குணப்படுத்த முடியும். ஆனால் 4வது நிலை அதாவது முற்றிய நிலை என்றால், அவர்களை குணப்படுத்தும் வாய்ப்பு 20 சதவீதம்தான் உள்ளது.

புற்றுநோய் சிகிச்சைகள் நவீனமயமாகிவிட்ட நிலையில் இப்போது கீ ஹோல் முறையில் எளிதாக செய்ய முடியும். அவர்கள் நீண்ட நாள் மருத்துவமனைகளில் தங்கி சிசிக்சை பெறவேண்டிய தேவையில்லை.

புற்றுநோயை தடுக்கும் வழிகள்

கட்டாயம் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும்

அதேபோல் புகைப்பிடிப்பவர்களை சுற்றி இருப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மாசு நிறைந்த பகுதிகளில் வசிக்கக்கூடாது.

நீங்கள் வேதிப்பொருள் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் பணி செய்பவர்கள் போதியளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு, நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் உள்ளிட்ட யோகாசனப்பயிற்சிகளை மேற்கொண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் காதர் ஹூசேன் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்