தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  World Cancer Day 2024 Do You Know The Theme Of World Cancer Day

World Cancer Day 2024 : உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் என்னவென்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Feb 04, 2024 05:45 AM IST

World Cancer Day 2024 : உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் என்னவென்று தெரியுமா?

World Cancer Day 2024 : உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் என்னவென்று தெரியுமா?
World Cancer Day 2024 : உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருள் என்னவென்று தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஏஜென்சி, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம், உலகில் தற்போது உள்ள புற்றுநோயின் அளவு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 115 நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 

அதில் பெரும்பாலான நாடுகள் புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றிற்கு போதிய நிதி ஆதாரம் கொடுப்பதில்லை என்று கூறுகிறது.

2022ம் ஆண்டில் உலகம் முழுவதும் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் உருவாகியுள்ளனர். 9.7 மில்லியன் பேர் இறந்துள்ளனர். புற்றுநோய் பாதித்த 5 ஆண்டுகள் உயிரோடு இருந்தவர்கள் 53.5 மில்லியன். 5ல் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 9ல் ஒரு ஆணுக்கும், 12ல் ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

உலகம் முழுவதிலும் அதிகளவில் உயிரிழப்பு மற்றும் நோயுற்ற தன்மைக்கு முதன்மை காரணமாக புற்றுநோய் உள்ளது. குறைந்த மற்றும் மத்தியதர வருமானம் உள்ள நாடுகளில்தான் 60 சதவீதம் புதிய புற்றுநோய்கள் தொற்றுகள் ஏற்படுகிறது. உலக புற்றுநோய் தினத்தில் புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் நுரையீரல், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிகளவில் இருந்தது. அடுத்தபடியாக கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. 2050ம் ஆண்டுக்குள் 35 மில்லியன் புதிய புற்றுநோய் தொற்றுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 2022ம் ஆண்டைவிட 77 சதவீதம் அது அதிகம் இருக்கும்.

2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை புற்றுநோய் சிகிச்சை இடைவெளியை குறைப்போம் என்ற கருப்பொருளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் கடைசி ஆண்டில் ஒன்றிணைந்து நாம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சவால் விடுவோம் என்பதுதான் இந்த கடைசி ஆண்டின் கருப்பொருள். இது உலகில் உள்ள தலைவர்கள் புற்றுநோய்க்கு முக்கியத்துவம் கொடுத்து, புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்துவது ஆகும். 

அதன் மூலம் புற்றுநோய் இல்லாத உலகை அமைப்பது என்பதாகும். மேலும் அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது உலகளாவிய உரிமை என்பதையும் இன்றைய நாள் அறிவுறுத்துகிறது. ஒருவரின் பொருளாதார நிலை, வயது, வாழிடம், பாலினம் என எந்த பாகுபாடும் இன்றி புற்றுநோய் தடுப்பு, சிகிச்சை பெய சம உரிமை பெற்றவர்கள் ஆவார்கள். 

எனவே அனைத்து நாடுகளையும், மக்களையும் நாம் புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

புற்றுநோய் தடுப்பில் அனைத்து சாத்தியமான விஷயங்களையும் நாடுகள் கடைபிடிக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையை நாடுகள் ஏற்பவேண்டும். அதன்படி வாழ்க்கையை காப்பாற்றும் கொள்கைகள் மறறும் தலையீடுகளை தொற்றநோய்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும்.

புற்றுநோய் தடுப்பில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். குறைவான விலையில் கிடைக்கக்கூடிய சிகிச்சைகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும் முடிவுகள் எடுப்பதற்கு நாடுகள் சரியான புள்ளிவிவரங்க வைத்திருக்க தொடர் கணக்கெடுப்புக்களை செய்துகொண்டே இருக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்