World Autism Day 2024 : உலக ஆட்டிச விழிப்புணர்வு தின வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் தெரியுமா?
ஏப்ரல் 2ம் தேதியை ஒருமனதாக ஜக்கிய நாடுகள் சபை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது. ஆட்டிசம் பாதித்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, அவர்களையும் சமூகத்தின் அங்கமாக்க உதவுவதும் இந்த நாளிக் நோக்கமாகும்.
உலகளவிலும், இந்தியாவிலும் ஆட்டிச பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் ஆட்டிச விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி ஆட்டிச தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதிலும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்கள். முன்பைவிட இது அதிகம் என்று நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இது இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததன் காரணமாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. காற்று மாசு, குறைவான எடையில் குழந்தை பிறத்தல் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றால் ஆட்டிச பாதிப்பு ஏற்படுகிறது.
ஆட்டிஸ்டிக் ஸ்பெக்ட்ரம் கோளாறு என்பது, பல நிறைய வளர்ச்சி குறைபாடுகளால் ஏற்படுகிறது. இதில் மற்ற குழந்தைகளைப்போல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடந்துகொள்ள, பேச, தொடர்புகொள்ள மற்றும் கற்க மாட்டார்கள்.
இந்த நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இந்த நிலை குறித்து கற்றுக்கொடுப்பது, இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் முன்னேற்றுவதற்காக உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ம் தேதி இந்த தினம் கடைபிடிக்கப்படவேண்டும் என்று ஐ.நா.வின் தீர்மானம் வலியுறுத்துகிறது.
இந்தியாவிலும் ஆட்டிச பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2021ம் ஆண்டு, குழந்தைகள் ஆராய்ச்சி இதழில் வெளியான ஆய்வறிகையில் 68ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிச பாதிப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே ஆட்டிச நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆண், பெண் விகிதம் 3 : 1 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால், ஆட்டிச பாதிப்பு ஏற்படுகிறது. அனைத்து ஆட்டிச குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. ஆனால், கூட்டத்தில் இருப்பவர்களுடன் தொடர்புகொள்வது, தொடர்புகொள்வது, ஒரு வேலையை மீண்டும் மீண்டும் செய்வது மற்றும் வெறித்தனமான ஆர்வங்கள் ஆகியவை இருக்கும்.
கருப்பொருள்
ஆட்டிச குழந்தைகளை முன்னேற்றுவது என்பதுதான் இந்தாண்டு ஆட்டிச விழிப்பு நாளின் கருப்பொருள். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு அதிக ஆதரவையும், சக்தியையும் கொடுப்பது என்பது இந்த நாளின் நோக்கமாகும். அவர்கள் ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வதற்கு வழிவகுப்பதும், வெற்றிகரமான வேலைகளை செய்வதற்கு உதவிசெய்வதை உறுதிசெய்வதாகும். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும், ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருள் கொடுக்கப்படுகிறது.
உலக ஆட்டிச தினத்தின் வரலாறு
2007ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதில் உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ஆட்டிச பாதிப்பில் உள்ளவர்களை ஏற்பதற்கும், ஊக்கபடுத்துவதற்கும் நாம் தொடர்ந்து பணிபுரியவேண்டும் என்பதற்காகவும், சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதாகவும் இந்த தினம் அமைய வேண்டும் என்றும் அது குறிப்பிடுகிறது.
ஏப்ரல் 2ம் தேதியை ஒருமனதாக ஜக்கிய நாடுகள் சபை உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது. ஆட்டிசம் பாதித்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, அவர்களையும் சமூகத்தின் அங்கமாக்க உதவுவதும் இந்த நாளிக் நோக்கமாகும்.
முக்கியத்துவம்
இந்த நாளின் முக்கியத்துவமாக, இந்த நாள் இந்த நோய் குறித்த கட்டுக்கதைகளை கட்டுடைக்கவும், அதுகுறித்து மக்கள் அறிந்துகொள்ளவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் எப்படி போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று மக்களுக்கு எடுத்துக்கூறுவதும், இதுகுறித்த களங்களை தீர்ப்பதும் இந்த நாளின் நோக்கமாகும்.
இது ஆட்டிசம் பாதித்தவர்களை சமூகத்தின் அங்கமாகவும், அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதையும் உறுதிப்படுத்துகிறது. ஆட்டிசம் குறித்த அதிக அறிவுடன், பெற்றோர் புதிய மற்றும் வளர்ந்துவரும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு புதிய திறன்களை கற்பிக்கலாம். அவர்களின் திறமைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்