தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  World Art Day 2024 : உலக கலை தினத்தின் முக்கியத்துவம், கருப்பொருள் மற்றும் வரலாறு என்ன என்று தெரியுமா?

World Art Day 2024 : உலக கலை தினத்தின் முக்கியத்துவம், கருப்பொருள் மற்றும் வரலாறு என்ன என்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Apr 15, 2024 06:00 AM IST

World Art Day 2024 : உலக கலை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவம், கருப்பொருள், வரலாறு என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

World Art Day 2024 : உலக கலை தினத்தின் முக்கியத்துவம், கருப்பொருள் மற்றும் வரலாறு என்ன என்று தெரியுமா?
World Art Day 2024 : உலக கலை தினத்தின் முக்கியத்துவம், கருப்பொருள் மற்றும் வரலாறு என்ன என்று தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

பரபரப்பான மற்றும் போராட்டம் நிறைந்த வாழ்க்கைக்கு மத்தியில் மக்கள் தங்களை சுற்றியிருக்கும் அழகுப்பொருட்களை உணர்வதற்காகவும், பாராட்டுவதற்காகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

நேரமின்மையால், கலைக்கூடங்களுக்கு செல்வதை பெரும்பாலானோர் செய்வதில்லை. இதனால், ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுவமு அவர்களுக்கு கலை ரசிக்க நினைவூட்டுவதாக இருக்கும். உலகின் அழகுகளை அவர்களை ரசிக்க வேண்டும். 

அனுபவிக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் நோக்கம். இன்று அறிவை பகிர்தல், ஆர்வத்தை தூண்டுதல் மற்றும் கலை குறித்த உரையாடல்களை உருவாக்குவது என்பது இந்நாளின் முக்கியத்துவமாக உள்ளது.

யுனெஸ்கோவின் 40வது பொது மாநாடு 2019ம் ஆண்டு நடந்தபோது உலக கலை தினம் நிறுவப்பட்டது. உலகம் முழுவதும் கலை மற்றும் கலை சார்ந்த விஷயங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அவற்றுக்கான பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

கிரியேட்டிவிட்டியை வளர்ப்பதற்கான ஊக்கியாக கலை உள்ளது. அது புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அடித்தளமிடுகிறது. உலகெங்கும் மக்களிடையே உள்ள கலாச்சார வேற்றுமைகளை போக்குகிறது. அறிவை வளர்ப்பது, ஆர்வத்தை தூண்டுவது மற்றும் அர்த்தமுள்ள உரையாடலை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கலையின் இந்த பண்புகள்தான், அதன் முக்கியத்துவம், சுற்றத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உருவாக்கியதை கோடிட்டு காட்டுவதுடன், கலைஞர்கள் மற்றும் கலைஞர்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. 

நமது கலையை வளர்த்தெடுப்பதன் மூலம், நமது கலாச்சாரத்தின் எல்லையை மட்டும் நாம் மிகைப்படுத்துவதில்லை, ஆனால், சுதந்திரம் மற்றும் அமைதிக்கு வித்திடும் உலகை உருவாக்குகிறோம்.

கருப்பொருள்

இந்தாண்டு உலக கலை தினத்தின் கருப்பொருள் – வெளிப்பாடுகளின் தோட்டம் – சமூகத்தை கலையின் மூலம் வளர்த்தெடுப்பது என்பதாகும். கலையின் சாரம் என்பது துடிப்பான மற்றும் வளர்க்கும் திறன் ஆகும். அது உலகம் முழுவதும் சமூகங்களிடையே தொடர்புகொள்வது, கிரியேட்டிவிட்டி மற்றும் ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.

ஒரு தோட்டத்தில் எப்படி பல செடிகள் இருக்குமோ ஒன்றாக வளருமே அதுபோல் கலையும், பல உணர்வுகளின் வெளிப்பாடுகள், யோசனைகள் மற்றும் கோணங்களை வெளிக்காட்டச் செய்கிறது. 

பல்வேறு பிண்ணனி கொண்ட தனிநபர்கள் ஒன்றுதிரண்டு ஒரு இடத்தில், அவர்களின் ஒற்றைக் குரலை, அனுபவங்களை பகிர்ந்துகொண்டு, மனித கலாச்சாரத்துக்கு உதவுவது ஆகும்.

வெளிப்படுத்துதல் என்ற இந்த தோட்டத்தில், ஒவ்வொரு கலையும், பூக்கள் பூத்து, தனித்தன்மை மற்றும் கிரியேட்டிவிட்டியை பிரிதிபலித்து, அதை உருவாக்கியவரையும் ஊக்கப்படுத்துகிறது. தோட்டத்துக்கு தண்ணீர் தேவைப்படுவதுபோல், கலைஞர்களுக்கும் ஆதரவும், ஊக்கமும் தேவைப்படுகிறது.

அப்போதுதான் செடி வளர்வதைப்போல் அவர்களும் வளர்கிறார்கள். வேற்றுமைகளுக்கு பாலம் அமைக்கும் சக்தி கலைக்கு உள்ளது. அது மக்களிடையேயும் தொடர்பை ஏற்படுத்துகிறது. 

கலையின் வழியாக சமூகம் தனக்குள்ள பொதுவான சவால்களைக் கூறலாம். பகிர்ந்துகொண்ட மதிப்பீடுகளை கொண்டாடலாம். அனுதாபத்தை புரிந்துகொள்ளலாம்.

இந்த நாளில் கலாச்சார வேற்றுமை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து கலையின் வெளிப்பாடு வேற்றுமைகளை கொண்டாடுவது என்பதை காட்டுகிறது. கிரியேட்டிவிட்டி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கிறது. புரிதல் மற்றும் உரையாடலை வளர்த்தெடுக்கிறது. கலைஞர்களுக்கு சுதந்திரம் என்பதை ஊக்குவிக்கிறது. சமூக மாற்றத்தை கொண்டுவருகிறது. இதனால் உலக கலை தினம் கொண்டாடப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்