தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Workplace Relationship Dont Just Tell Your Boss This How To Be Mindful In The Workplace

Workplace Relationship : உங்க பாஸ்கிட்ட இத மட்டும் சொல்லிடாதீங்க பாஸ்! பணியிடத்தில் எப்படி கவனமான இருக்க வேண்டும்?

Priyadarshini R HT Tamil
Feb 26, 2024 05:16 PM IST

Workplace Relationship : உங்க பாஸ்கிட்ட இத மட்டும் சொல்லிடாதீங்க பாஸ்! பணியிடத்தில் எப்படி கவனமான இருக்க வேண்டும்?

Workplace Relationship : உங்க பாஸ்கிட்ட இத மட்டும் சொல்லிடாதீங்க பாஸ்! பணியிடத்தில் எப்படி கவனமான இருக்க வேண்டும்?
Workplace Relationship : உங்க பாஸ்கிட்ட இத மட்டும் சொல்லிடாதீங்க பாஸ்! பணியிடத்தில் எப்படி கவனமான இருக்க வேண்டும்?

ட்ரெண்டிங் செய்திகள்

அது எனது வேலை கிடையாது

இப்படி நீங்கள் கூறும்போது, நீங்கள் கூடுதலாகவோ அல்லது வேறு பொறுப்பை ஏற்றுக்கொள்ள முனைவதில்லை என்பதை காட்டுகிறது. மாறாக, நீங்கள் இந்தப்பணியை செய்வதை ஏற்றுக்கொண்டு, ஆனால், அதிக வேலைப்பளு இருக்கும்போது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு அதற்கு ஏற்றாற்போல் செய்வது மிகவும் அவசியம்.

எனக்கு தெரியாது

இப்படி கூறுவது மிகவும் மோசமான ஒன்று. ஒரு முயற்சியும் எடுக்காமல், கூடுதலாக எது குறித்தும் ஆலோசிக்காமல் இப்படி கூறுவது, நீங்கள் முனைப்புடன் இல்லை என்பதையோ அல்லது உங்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன் இல்லை என்பதையோ சுட்டிக்காட்டுகிறது. எனவே என்ன என்பதை விவரமாக உள்வாங்கிக்கொண்டு, தெளிவாக விளக்கம் கேட்டுவிட்டு, என்ன கேட்கப்பட்டது என்பதை புரிந்துகொண்டு அதற்கு பதில் கொடுப்பது நல்லது.

என்னால் செய்ய முடியாது

ஒரு பணி ஏன் சவாலான ஒன்றாக உள்ளது என்பதற்கு சரியான சில காரணங்கள் இருக்கலாம். அதற்கு மாற்று இல்லை என்றால் அது கடினமான ஒன்றுதான். எனவே அதுபோன்ற மிகவும் சவாலான பணிகளுக்கு உங்கள் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலாம் அல்லது வேறு தீர்வுகள் உள்ளதா என்பதை ஆராயலாம். தேவைப்பட்டால் விட்டு விடலாம். ஆனால் எதையும் ஆராயாமல் முடியாது என்று எடுத்தவுடனே கூறிவிட்டீர்கள் என்றால், உங்கள் பணியின் மற்றவர்களின் மரியாதை குறையும்.

எனக்கு போர் அடித்து விட்டது

இப்படி நீங்கள் பணியின்போது கூறினால், அது உங்களுக்கு வேலையில் ஆர்வம் இல்லை என்பதை குறிக்கும். எனவே, உங்களுக்கு சவாலாக இல்லாத வேலை என்றால், உங்கள் பாஸிடம் பேசி கூடுதல் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் அது பணியிடத்தில் உங்களின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் உங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

நான் இன்று சீக்கிரம் கிளம்ப வேண்டும்

முன்னரே அனுமதி பெறாமலோ அல்லது சரியான காரணம் இல்லாமலோ திடீரென நான் உடனே செல்ல வேண்டும் என்று கூறும்போது, அது பணியை பாதிக்கிறது. இது உங்களின் பொறுப்பின்மையை காட்டுகிறது. எனவே மாற்றங்கள் ஏதாவது இருந்தால், முன்னதாகவே அதை தெரிவிப்பதுதான் ப்ரொஃபஷனலிசம். அதற்கு போதிய அனுமதியும் பெற்றுவிடவேண்டும்.

என்னால் வேலை செய்ய முடியாது

இதுபோன்ற வார்த்தைகளும், குழுவினர் ஒன்று சேர்ந்து செய்யும் பணியை பாதிக்கும். அது குழுவில் ஒரு டென்சனை குறைக்கும். உங்களுக்கு உங்கள் உடன் பணிபுரிபவர்களுடன் ஏதேனும் பிரச்னை என்றால், அதை நேரடியாக எடுத்துக்கூறி சுமூகமாக பிரச்னைகளை தீர்த்துக்கொள்வது நல்லது. பிரச்னைகளில் இருந்து விலகிச்செல்வதைவிட, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது நல்ல பணியாளர் என்பதை காட்டுவதாக இருக்கும்.

நான் ரொம்ப பிசி

பணியை சரியாக முடிப்பது மிகவும் அவசியம்தான். மிகவும் பரபரப்பாக இருப்பதை சாக்காக வைத்துக்கொண்டு பணிகளை தள்ளிப்போடக்கூடாது. எனவே வேலையை முடிப்பதில் குறியாக இருக்கும். மாறாக, உங்கள் பணிச்சுமை அதிகம் இருந்தால், அதுகுறித்து நீங்கள் கலந்துரையாடி, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் பாஸிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்

நீங்கள் உங்கள் தற்போதைய பணியைவிட்டு விலகுவது குறித்து நீங்கள் முடிவெடுக்காமல் உங்கள் பாஸிடம் அதுகுறித்து நீங்கள் பேசவே கூடாது. இதை செய்தால், அது பணியில் வேறு சில பிரச்னைகளை உருவாக்கிவிடும். அது உங்கள் உறவை பாதிக்கும். நீங்கள் முடிவெடுத்துவிட்டால் உடனே கிளம்பிவிடவேண்டும்.

எனக்கு ஊதிய உயர்வு வேண்டும்

நீங்கள் ஊதிய உயர்வு அல்லது பணப்பலன்களை எதையும் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கும்போது, உங்களின் பணிகள், திறன்கள் மற்றும் சாதனைகள் மீது கவனம் செலுத்துங்கள். உங்களின் பணத்தேவைக்காக நீங்கள் ஊதிய உயர்வு கோருவது தவறு. உங்களின் மதிப்புக்கான தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்துங்கள். உங்களின் பணிக்கு உள்ள சந்தை மதிப்பு, அதில் உங்களின் மதிப்பு என அனைத்தையும் சுட்டிக்காட்டி கோருவதுதான் சிறந்தது.

நான் உங்களை மேனேஜராக மதிக்க மாட்டேன்

உங்களுக்கு உங்கள் மேனேஜர் மீது அதிருப்தி இருந்தால், அதை நேரடியாக தெரிவிக்காதீர்கள். அது உங்கள் பணி உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும். உங்கள் மேனேஜரை பிடிக்கவில்லையென்றால், அதை நீங்கள் மரியாதை நிமித்தம் கூறவேண்டும். அவரிடம் அதுகுறித்து உரையாடலாம் அல்லது ஃபீட்பேக் செசன்களில் வெளிப்படுத்தலாம். எனவே நீங்கள் எப்போதும் ஒரு ப்ரொஃபஷனலாக நடந்துகொள்ளுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்