பணியிடச்சூழல் : பணியிடத்தில் நச்சு உறவுகள்; என்ன செய்து தவிர்க்கலாம்? இதோ வழிகாட்டி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பணியிடச்சூழல் : பணியிடத்தில் நச்சு உறவுகள்; என்ன செய்து தவிர்க்கலாம்? இதோ வழிகாட்டி!

பணியிடச்சூழல் : பணியிடத்தில் நச்சு உறவுகள்; என்ன செய்து தவிர்க்கலாம்? இதோ வழிகாட்டி!

Priyadarshini R HT Tamil
Updated Apr 22, 2025 11:07 AM IST

பணியிடத்தில் : பணியிடத்தில் உள்ள நச்சு உறவுகளிடம் இருந்து நீங்கள் என்ன செய்து விலகியிருக்க முடியும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

பணியிடச்சூழல் : பணியிடத்தில் நச்சு உறவுகள்; என்ன செய்து தவிர்க்கலாம்? இதோ வழிகாட்டி!
பணியிடச்சூழல் : பணியிடத்தில் நச்சு உறவுகள்; என்ன செய்து தவிர்க்கலாம்? இதோ வழிகாட்டி!

வேலையில் கவனம்செலுத்துங்கள்

உங்களைச் சுற்றியுள்ள நபர்கள் ஆபத்தானவர்கள் என்றால், நீங்கள் அவர்களிடம் எதுவும் பேசக்கூடாது. உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை அலுவலகத்தில் யாருடனும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். சில அடிப்படை தகவல்கள் மட்டும் அவர்கள் அறிந்திருக்கட்டும். அது ஏதேனும் அவசரத்துக்கு உதவும். ஏனைய தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள்

வேலை என்று வரும்போது, அனைத்தையும் ஆவணப்படுத்துங்கள், ஆதாரங்கள் வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு வாய்ப்பாக எதையும் நீங்கள் கொடுத்துவிடவேண்டாம். அனைத்தையும் ஆவணப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

கிசுகிசுக்களிடம் இருந்து விலகியிருங்கள்

நீங்கள் கிசுகிசுக்களை கூறவும் வேண்டாம். கிசுகிசுக்கள் உங்களிடம் பேசினால் அதை கவனத்தில்கொள்ளவும் வேண்டாம். அவற்றிடம் இருந்து விலகியிருங்கள். இது அலுவலகத்தில் உங்களுக்கு தேவையற்ற பிரச்னைகளைக் கொண்டுவரும்.

முன்னெடுப்புக்களை முன்னெடுங்கள்

உங்களின் வேலைகளைக் கடந்து, புதிய யோசனைகளையும், நல்ல ஐடியாக்களையும் கொண்டுவாருங்கள். இது உங்களை அலுவலகத்தில் தொடர்ந்து பிரகாசிக்க உதவும்.

உங்கள் பணிக்கான பலனை நீங்கள் தான் பெறவேண்டும்

நீங்கள் செய்த வேலைக்கான அங்கீகாரத்தை வேறு ஒருவர் பெறுகிறார் என்றால், அதற்கு நீங்கள் அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு கிரெடிட் கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துங்கள்.

உங்களின் பணி சிறக்கட்டும்

வேலை என்று வந்தால், யாரும் உங்களிடம் எந்த கேள்விகளும் கேட்கக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். உங்கள் வேலையில் நேர்மையாகவும், தூய்மையாகவும் இருங்கள்.

எப்போதும் அமைதியாக இருங்கள்

உங்கள் பணியில் நீங்கள் எப்போதும் அமைதியை இழக்கக்கூடாது. தேவையற்ற கூச்சல் பணியை பாதிக்கும். எனவே எப்போதும் அமைதியதாகவே இருங்கள். அப்போது உங்களின் சிறந்த பணி வெளிப்படும்.

வேலைக்கு வெளியில் வாழ்க்கை

பணியிடத்தில் உள்ள சூழல் நீங்கள் வெளியில் மகிழ்ந்திருப்பதை பாதிக்கக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ள அனுமதிக்காதீர்கள். உங்கள் மனதின் மகிழ்ச்சி மற்றும் அமைதி மிகவும் அவசியம்.

சரி எது, தவறு எது?

பணியில் எப்போதும் சரி எது தவறு எது என்று ஒரு கோடிட்டு இருங்கள். உங்கள் இடத்தில் யாரும் எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக் கூடாது.